பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.37

யின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்தார். பின்னர் கீதையின் சமஸ்கிருத மூலத்தையும், குஜராத்தி மூலத்தை யும் படிக்கத் தொடங்கினர். அதிலிருந்து கீதை அடிகளின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டது.

மேற்கூறிய நண்பர்கள் இருவரும் காங்தியடிகளையும் பிரம்மஞான சிங்கத்தில் சேருமாறு வற்புறுத்தினர்கள். “என்னுடைய சொந்தச் சமயத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாதிருக்கையில், பிற சமயக் கழகம் எதிலும் சேர விரும்பவில்லை’ என்று அடிகள் மறுத்துக் கூறிவிட்டார். பிறகு பிரம்மஞான சங்க நூல் களேயும், இந்து சமய நூல்களேயும் படித்தார். இந்து சமயத்தில் குருட்டு கம்பிக்கைகளே மிகுந்திருக்கின்றன வென்று, பாதிfமார்களின் பிரசாரத்தில்ை ஏற்பட்டிருந்த தவருண கொள்கை அடிகளின் உள்ளத்திலிருந்து மறைந்தது.

ஒரு நாள் மான்செஸ்டரிலிருந்து வந்த உத்தமக் கிருத் தவர் ஒருவரை, அடிகள் சக்தித்தார்; அதுவும் இலண்டன் மாநகரிலிருந்த சைவ உணவு விடுதியில் சங்தித்தார்; கிருத்தவ சமயத்தைப் பற்றித் தம் உள்ளத்தில் கொண் டிருந்த ஐயப்பாடுகளேயெல்லாம் அங்கண்பரிடம் கேட்டார். ‘மதுவருக்துவதும் புலாலுண்பதும் கிருத்தவ சமயக் கொள் கைகளா? என்று அங்கண்பரை வினவினர். இராச கோட்டையில் கிருத்தவப் பாதிரிமார் பிற சமயங்களே இழித்துப் பேசியதையெல்லாம் எடுத்தியம்பினர். அடி களின் சொற்களைக் கேட்ட அங்கண்பர் மிகவும் வருந்தினர். ‘கான் புலால் உண்பதில்லை; மது அருந்துவதில்லை. கிருத் கவர் பலர் புலால் உண்பதும் மது அருங்துவதும் உண்மையே. ஆல்ை எங்கள் சமயநூலில் மதுவும் புலாலும் அருங்தும்படி கட்டளேயிடப்படவில்லே. அருள் கூர்ந்து விவிலிய நூலேப் படியுங்கள் என்று அங்கண்பர் கூறினர். அவரே விவலிய நூலின் படி ஒன்றை அடிகளுக்கு வாங்கிக்

ம. 9