பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

அழைத்துச் சென் ருர், ஆல்ை எதுவும் அடிகளின் உள்ளத்தை மாற்றவில்லை.

கிருத்தவ நண்பர்கள் காந்தியடிகளைத் தங்கள் சமயத் தில் சேர்த்துக்கொள்ள முயன்றது போலவே, இசுலாமிய கண்பர்களும் முயற்சி செய்தனர். இசுலாமிய நூல்களைப் படிக்குமாறு தாதா அப்துல்லா அடிக்கடி அடிகளுக்குக் கூறுவார். காந்தியடிகளும், சேல்’ என்பாரின் குரான் மொழிபெயர்ப்பையும், இசுலாத்தைப் பற்றிய வேறு சில நூல்களையும் படித்தார். சமயம் நேரும்போதெல்லாம் இசுலாத்தின் பெருமைகளே எடுத்துக் கூறிக் காந்தியடி களேத் தம் சமயத்தின்பால் அப்துல்லா சேத் இழுக்க முயன்றார். இதுபோன்ற சமயங்களில் தம் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களே அடிகள் பின்வருமாறு குறிப்பிடு கிறார்:

“கிருத்தவ சமயக் கொள்கைகளில் எனக்குப் பல ஐயப்பாடுகள் எழுங்தன. ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரப் புதல்வர் என்றும், அவரிடம் நம்பிக்கை வைப் போர் மட்டுமே வீடுபேற்றைப் பெறுவர் என்றும், அச்சம யத்தார் கூறிய சொற்களே என்னுல் கம்ப முடியவில்லை. கடவுளுக்கு மக்கள் இருக்கக் கூடுமானல், நாம் எல்லோரும் அவருடைய மக்களே. ஏசுகாதர் கடவுளைப் போன்றவ ரானல், அல்லது கடவுளேயானல், உலகமக்கள் எல்லோரும் கடவுளைப் போன்றவராகவோ அல்லது கடவுளேயாகவோ ஆதல் கூடும். ஏசுநாதர் தம் இறப்பில்ை, தாம் வடித்த குருதியால், உலகத்தின் பாவங்கள் எல்லாவற்றிற்கும் கழுவாய் தேடிவிட்டார் என்பதை என் அறிவு அப்படியே ஒத்துக்கொள்ளத் தயாராயில்லே. இக் கொள்கையை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாதென்றும், உட் கருத்தை நோக்க வேண்டுமென்றும் எனக்குத் தோன் அறியது. மற்றும், மக்களினத்திற்கே ஆன்மா உண்டு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையா