பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 40

தென்பதும், அவை சாவின்போது அடியோடு அழிந்து விடுகின்றன என்பதும் கிருத்தவக் கொள்கை. ஆனல் எனது கொள்கை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஏசுநாதரை நான் தியாகமூர்த்தி என்றும், வாய்மைக்காக உயிர் துறந்த பெருந்தகை என்றும், கடவுள் தன்மை பொருங்திய சமயக்குரவர் என்றும் ஒப்புக்கொண்டேன். ஆனல், உலகிலேயே இதுகாறும் பிறந்தவர்களுள் ஏசுநாதர் ஒருவரே மகான்’ என்பதை என்னல் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சிலுவையில் அவர் உயிர்நீத்தது உலகுக்கு ஓர் அரிய எடுத்துக் காட்டாகும். ஆல்ை அதில் எல்லே மீறிய விங்தை ஏதும் இருப்பதாக என் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏசுகாதரைப் போலத் துயவாழ்வும், தன்னலமறுப்பும் கொண்ட பெரியார்களும், விங்தைகளே நிகழ்த்திய மகான்களும் எல்லாச் சமயத்திலும் இருந்திருக் கின்றனர். கிருத்துவ சமயத்தில் பாவிகள் எல்லோர்களா வது குறித்துக் கேள்விப்பட்டது போலவே, மற்றச் சமயங் களிலும் மக்கள் சீர்திருந்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். தத்துவத்துறையில் பார்க்குங்கால், கிருத்தவ சமயக் கொள்கைகள், பிற சமயக் கொள்கைககளை விட உயர்ந் தவை என்று கூறிவிட முடியாது. தன்னல மறுப்பை முன்னிட்டுப் பார்க்கையிலோ, இங்துக்கள் கிருத்தவர் களிலும் பெரிதும் மேம்பட்டவர்கள் என்று தோன்றிற்று. கிருத்தவ சமயத்தை முற்றும் கிறைவுபெற்ற சமயம் எனருே, எல்லாச் சமயங்களிலும் தலைசிறந்த தொன் றென்றாே என்னல் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஆனல் இந்து சமயமும் முழுதும் கிறைவுபெற்ற சமய மென்று நான் உறுதியாகக் கூறமுடியாது. இச் சமயத் திலும் பல குறைகள் என் கண்முன்னே நன்றாகப் புலப் பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை இந்து சமயத் தின் ஒரு பகுதியானல், அது அழுகிப்போன பகுதியாகவே இருக்க வேண்டும். பற்பல சாதிகள், கோட்பாடுகள்