பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

முதலிய பிரிவுகளின் நீதியும் எனக்குப் புலகைவில்லை. மறைகள் யாவும் இறைவல்ை வெளியிடப்பட்டவையெனில், விவிலிய நூலும், குரானும் ஏன் அத்தகையனவாக இருக்கக்கூடாது?”

அடிகள் வாழ்வின் முற்பகுதியில், அவருள்ளத்தில் சமயத்தைப்பற்றி எழுந்த என்ன அலேகளைக் கண்டோம். இவற்றால் காம் அறிவது யாதெனில், எல்லாச் சமயங் களிலும் படிங்துள்ள உயர்ந்த கொள்கைகளே அடிகளின் சமயமாக இருக்க முடியும் என்பதாகும். அதன் விரிவைப் பின்னர் காண்போம்.

அடிகளைப் பார்த்து, விேர் எச்சமயத்தைச் சார்க் தவர்?’ என்று யாராவது கேட்டால், “கான் வைணவன்’ என்று தயங்காமல் கூறுவார். அவரை அறியாதார்க்கு, அடிகளின் விடை வியப்பை ஊட்டலாம். ஏனெனில் காங்தியடிகள் திருமால் கோவிலுக்கும் செல்லுவதில்லை: வீட்டிலேயும் இறைவனின் திருவுருவத்தை ைவ த் து வழிபாடு நிகழ்த்துவதில்லை. வைணவனுக்குரிய துளசிமணி மாலயை அவர் கழுத்தில் காணமுடியாது. அடிகளின் வைணவம் உயர்வுதாழ்வற்றது; தீண்டாமைப் பேயைத் திதென வெறுப்பது; வடகலே, தென் கலைச் சண்டைகளுக்கு அப்பாற்பட்டது. உண்மை வைணவன் யார் என்பதை அவரே விளக்குகிரு.ர்.

காந்தியடிகளின் வழிபாட்டுப் ப.ா ட ல் க ளி ல் உள்ளத்தை உருக்கும் தன்மையது, வைஷ்ணவ ஜனதோ’ என்று தொடங்கும் பாடல். அப்பாடல் நரசிம்ம மேத்தா என்பவரால் எழுதப்பட்டது அப்பாடலில் வைணவனின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. அவை பின்வருமாறு :

“பிறருடைய துன்பங்களே உணர்கிறவனும், துன்பப் படுவோர்க்கு இறங்கி நன்மைபுரிபவனும், உள்ளத்தில் சிறிதும் செருக்கற்றவனும் வைணவன்.