பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

இப்படியெல்லாம் கல்லோர் அறிவுரைகளே மதித்து கடப்பவன் பதின்மடங்கு நன்மை பெறுவான்.

சான்றாேர் எனப்படுவோரின் இலக்கணம் மேலே சொல்லப்பட்டவை மட்டுமன்று; அவர்கள் மக்களினம் எல்லாம் ஒன்றென உணர்ந்தவர்கள்; ஆதலின் இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்புடையவர்கள்

இன்ன செய்தார்க்கும் இனியவை செய்வதில் அவர்கள் பேரின் பம் அடைவார்கள்.”

இப்பாடலின் இறுதி வரிகள் அடிகளின் இளமை உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தன. மேற் கூறிய பாடல்களில் காணப்படும் கருத்துக்களே இவருடைய சமயம். இக் கருத்துக்கள் படிங்துள்ள சமயங்கள் யாவும் அடிகளின் சமயங்களே.

காங்தியடிகளின் மு ற் போக்கு க் கருத்துக்களும், பொதுமை எண்ணங்களும் தீண்டாமைக் கொள்கையும் தீவிர இந்துக்களுக்குப் பிடிப்பதில்லை. இந்து சமயத்தைப் பாழ் செய்ய வங்தவர் என்று அடிகளைக் குறைகூறினர்: குற்றம் சாட்டினர். காங்தியடிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே இசுலாம் நண்பர்களோடு நெருங்கிய தொடர்புண்டு. இந்திய நாட்டில் இந்தியர்களும், இசுலாமியர்களும் உடன் பிறந்தவர்களாக வாழ வேண்டுமென்பதற்காக அடிகள் அரும்பாடுபட்டார். இசுலாமியரின் சமயக் குறிக்கோளுக்கு ஆதரவு காட்டுவதற்காகக் ‘கிலாபாத் இயக்கத்’தையும் அரசியலோடு இணைத்துக் கொண்டார். 1947-48-ல் கடை பெற்ற இந்து-முஸ்லீம் குழப்பத்தை அடக்குவதற்காக அல்லும்பகலும் இடையருது உழைத்தார். இறுதியில் அப்பணியிலேயே தம் இன்னுயிரை கல்கினர்.

இவ்விடத்தில் காங்தியத்தை நன்குணர்ந்த இரண்டு கவிஞர்களின் பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன் :