பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மருத்துவர்களும் இலண்டன் மாநகரில் துருவித் துருவித் தேடினர். பெர்னர்டுஷாவைவிட வயதில் மூத்தி புலால் உணவுக்காரர் கிடைக்கமாட்டாரா என்று ஏங்கினர். பெர்னர்டுஷாவை இன்னும் கொஞ்ச காள் வாழ வைத்து, அவர் இலக்கியத் தொண்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆங்கிலேயர் அடக்க முடியாத ஆசை கொண்டனர். ஆனல் பயனில்லாமல் போய்விட்டது. பெர்னர்டுஷாவைவிட வயதில் மூத்தவர் யாரும் கிடைக்க வில்லை. பெர்னர்டுஷாவும் உயிர் துறங்தார்.

பெர்னர்டுஷா கொள்கை வாதி. புலால் உணவைவிட மரக்கறி உணவே மக்களினத்துக்கு ஏற்றது என்ற ஆகொள்கையில் உறுதியான கம்பிக்கை கொண்டவர். அவருடைய மரக்கறி உணவுக் கொள்கைக்கு அடிப்படைக் காரணம் அவருள்ளத்தில் படிங்திருந்த அருள். அதே அருள்தான் காங்தியடிகளையும் புலாலை வெறுக்குமாறு செய்தது

இங்திய நாட்டில் தோன்றிய சமயங்கள் பல. அவை சைவம், சமணம், பெளத்தம், வைணவம் என்பன. இந்திய காட்டுச் சமயங்கள் எல்லாம் புலால் உண்ணலே மறுத்தே கூறுகின்றன. கிருத்தவசமயம் புலாலே மறுத்துக் கூற வில்லை. ஏகபெருமானே மீனைப் பகிர்ந்து அன்பர்கட்கு அளித்ததாக விவிலிய நூல் கூறும். மேலும் புலால் உணவு பற்றிய கொள்கையானது, காட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

சிலர் புலால் உணவைத் துாற்றியும், பலர் புலால் உண வைப் போற்றியும் கூறுகின்றனர். புலால் உணவை மிகவும் விரும்பிப் போற்றிவரும் மேலை நாடுகளில்கூட, மரக்கறி உண்டோர் கழகம் உள்ளது. புலால் உணவினரோ வேறு பல ஐயங்களேக் கிளப்புகின்றனர். புலால் மறுப்புக் கொள்கை உலகிலுள்ள எல்லா மக்களினத்துக்கும் பொருங்