பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


திருந்தினார். ஆனால் நாம் குற்றம் என்று எதை உணருகிறோமோ அதை விட்டுத் திருந்துவதில்லை; மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். காங்தியடிகள் குலத்தார். புலால் உணவு உண்ணும் வழக்கமில்லை. ஒரு கெட்ட நண்பனின் தொடர்பால், இவர் புலால் உண்ண ஆரம்பித்தார். அனால் புலால் உண்ட இரவு, வயிற்றில் ஆடு கத்துவதுபோல் இருக்குமாம். உடனே திடீரென்று விழித்து எழுத்துவிடுவாராம். தம்முடைய தவற்றுக்காக வருந்துவாராம். மேலும், புலால் உண்ட நாட்களில் அன்னையார் உணவு உண்ண அழைத்தால், “எனக்குப் பசிக்கவில்லை; வயிறு எப்படியோ இருக்கிறது; நண்பர் வீட்டில் சாப்பிட்டேன்” என்பன போன்ற பொய்களைக் கூற நேரிட்டதாம். புலால் உண்டதற்காகக் கூடக் காந்தியார் அதிகம் வருந்தவில்லை. பெற்ற அன்னையிடம் பொய் கூற வேண்டியிருக்கிறதே என்பதற்காகப் பெரிதும் வருந்தினார். இங்கிலாந்திற்குப் படிப்பதற்காகச் சென்றபொழுது, “புலால் உண்பதில்லை; மது அருங்துவதில்லை; பிற மாதரை அன்னையாக கருதுவேன்” என்று மூன்று வாக்குறுதிகளை அளித்து விட்டுச் சென்றார். இங்கிலாந்து குளிர்நாடு: அங்குப் புலால் உண்ணாமல் வாழ்வது கடினம். அதனால் காந்தியார் எவ்வளவோ துன்பங்களுக்கும், நண்பர்களின் இகழ்ச்சிக்கும் ஆட்பட்டார். பல கல் தொலைவு நடந்து சென்று ஒருவேளைச் சைவ உணவு உண்டார். தாமே சமையல் செய்து சாப்பிட்டார். இந்திய நாட்டிலிருந்து சென்ற உயர்சாதி மாணவர்கள் கூடப் புலால் உணவு உண்டனர். ஆனல் காந்தியார் இறுதிவரையில் புலால் உணவைக் கையினாலும் தீண்டவில்லை எனவே காந்தியடிகளைப் புலால் உண்ணல் என்னும் குற்றத்திலிருந்து காத்தது சத்தியமே என்பதை அறியலாம்.

காங்தியடிகள் திருட்டுத்தனமாகப் புலால் உண்டது போலவே இளமையில் சுருட்டும் குடிக்கத் தொடங்கினார்.