பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50

ளத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது மனித ஊனைக் கூடப் பசியின் காரணமாகப் பலர் உண்டதாகப் பங்கிம் சங்திரர் தம் ‘ஆனந்த மடத்தில் கூறுகிரு.ர்.

இவ்வாறு புலான்லப்பற்றிய கொள்கைகள் பலவாருக உள்ளன. ஆனல் காந்தியடிகளின் புலால் மறுப்புக் கொள்கை முற்றிலும் மாறுபட்டது. போலிக் காரணங் களுக்காகப் புலாலைக் கைவிட்டிருப்பது சிறந்த கொள்கை யாகாது. உண்மையான புலால் மறுப்புக் கொள்கை இன்ன செய்யாமை, கொல்லாமை, அருளுடைமை என்பன வற்றி ளிைன்றும் வளர வேண்டும். காங்தியடிகளின் கொள்கை இத்தகையதே.

இனி, காங்தியடிகள் புலால மேற்கொண்டதற்குரிய காரணங்களே ஆராய்வோம். அவரே அவற்றை விளக்கு கிறார். காங்தியடிகள் மோடபனியா என்ற வைணவ குலத்தைச் சார்ந்தவர் அக்குலத்தவர் புலாலே அறவே வெறுப்பவர். அப்படியிருக்க அடிகள் அப்பழக்கத்தை மேற்கொள்ளப் புகுந்தது விங்தையே.


காங்தியடிகள் காச்சுவைக்காகப் புலால் உணவை மேற் கொள்ளவில்லை. நார்மாத் என்பவர் பாடிய ஒரு சிங்துப் பாடல், அக் காலத்தில் பள்ளிப் பிள்ளைகளிடத்தே அதிக மாக வழங்கிவங்தது. அதன் பொருள் வருமாறு :-"வலிமை படைத்த ஆங்கிலேயனேப் பார். சோகை இந்தியன் மீது அவன் ஆட்சி செலுத்துகிருன். காரணம், புலால் உணவு தின்று அவன் ஐந்து முழ உயரம் வளர்ந்திருப்பதே.”

இப்பாட்டைப் படித்தவுடன் மோகனதாசின் உள்ளத் தில் ஒரு விபரீத எண்ணம் உண்டாயிற்று. நாமும் ஏன் ஆங்கிலேயனைப்போல் புலால் உண்டு வலிமை பெற்று வளரக் கூடாது? அவ்வாறு வளர்ந்தால் ஆங்கிலேயனே அடித்து விரட்டி விடலாம் என்று அவருடைய அரும்பு