பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 I

உள்ளம் எண்ணியது. சில திய கண்பர்கள் இக்கொள்கைக் குத் தீபமிட்டு வளர்த்தனர். சோதனை தெர்டங்குவதற்கு ஒரு நாள் குறிக்கப்பட்டது. பின் கடந்ததை அடிகளின் வாயாலேயே கேட்போம்.

“குறிப்பிட்ட காள் வந்தது. அப்போதைய எனது கிலேயை உள்ளபடி விவரித்தல் முடியாத செயல். சீர்திருத் தத்தில் உற்சாகமும், வாழ்க்கையில் ஒரு புதுமையான மாறுதலேக் காணப் போகிருேமென்ற ஆவலும் ஒருபக்கம் இருந்தன. மற்றாெருபுறத்தில் திருடனைப் போல் ஒளிந்து அச்செயலைச் செய்யவேண்டி யிருக்கிறதே என்ற வெட்கம். இவ்விரு வகை உணர்ச்சிகளில் எது மேலெழுந்து கின்றது என்று சொல்வதற்கில்லை. ஆற்றங் கரையினில் தனிமை யான இடமொன்றை நாடிச் சென்றாேம். அங்கு என் வாழ் காளில் முதன் முகலாக இறைச்சியைக் கண்டேன். அத் துடன் கடை ரொட்டி கொஞ்சம் இருந்தது. இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. வெள்ளாட்டு மாமிசம் தோலைப் போல் கடினமா யிருந்தது. என்னல் அதைத் தின்னவே முடியவில்லை. அருவருப்பு அதிகமாகவே, முடியாதென்று விட்டு விட்டேன்.

அன்றிரவெல்லாம் கான் உறங்கவில்லை. ஒருவகைப் பயங்கரத் தோற்றம் உண்டாகிக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கண்ணயர்ந்ததும் உயிருள்ள ஆடு ஒன்று என் வயிற்றுக்குள் இருந்து பரிதாபமான குரலில் கத்துவதாகத் தோன்றும்; திடுக்கிட்டு எழுவேன். கான் செய்ததை எண்ணிக் கழிவிரக்கம் கொள்வேன். ஆனல் அடுத்தாம் போல் புலால் உண்ணல், காட்டின் விடுதலைக்காக கான் மேற்கொள்ள வேண்டிய கடமை என்பதை நினைவு கூர்ந்து மீண்டும் உற்சாகம் கொள்வேன்.

என் கண்பர் எடுத்த காரியத்தை எளிதில் விட்டு விடுபவர் அல்லர். இறைச்சியைப் பலவகை உயர்ந்த பணியார வகைகளாகப் பாகம் செய்து பார்வைக்கு அழகா