பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52

யிருக்கும்படி செய்து வைக்கலானர். சாப்பிடுவதற்கு ஆற்றங்கரைக்குப் பதிலாக அரசாங்க மாளிகையொன்றை யும் பிடித்தார். அங்கிருந்த உணவு மண்டபத்தில் காற்காலி, மேசை முதலியன இடப்பட்டிருந்தன. அவ் விடத்துத் தலைமைச் சமையற்காரருடன் பேசி என் நண்பர் வேண்டிய ஏற்பாடு செய்திருந்தார்.

இத் துாண்டிலில் நான் விழுந்தேன். ரொட்டியில் வெறுப்பையும், ஆடுகளிடம் இரக்கத்தையும் எப்படியோ போக்கடித்துக் கொண்டேன். இன்னும் இறைச்சி சுவைக்க வில்லையாயினும், இறைச்சிப் பணியாரங்களேச் சுவையுடன் உண்ணத் தொடங்கினேன். இவ்வாறு ஓராண்டு கிகழ்ந்து வந்தது. ஆனல் இந்த ஓராண்டில் ஆறு முறைக்கு மேல் இத்தகைய புலால் விருந்துகள் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் இரண்டாகும். முதலாவது அரசாங்க மாளிகை காள்தோறும் கிடைப்பதில்லை. இரண்டாவதாக, உயர்ந்த வகைப் புலால் உண்டியைத் தயாரிப்பதற்குப் பணம் நிரம்ப வேண்டியிருந்தது.

இத்தகைய திருட்டு விருந்துகளில் உணவருந்திய நாட்களில், வீட்டில் சாப்பிடுவது இயலாத செயல் தாயார் உணவு உண்ண அழைக்கும் போது, கான் மறுத்தால், என் என்று கேட்பார். ‘பசியில்லை, வயிறு என்னவோ போலிருக் கிறது என்று பொய் கூறுவேன். இக்காலங்களில் புலால் உணவுக்காகப் பெற்ற தாயிடம் பொய் கூற வேண்டியிருக் இறதே என்று வருந்துவேன். புலால் உண்பதும், நாட்டில் உணவுச் சீர்திருத்தம் செய்வதும் இன்றியமையாதனதான். ஆளுல் புலால் உண்ணுமலிருப்பதை விடப் பெற்றாேfடம் பொய் சொல்லி ஏமாற்றுதல் கடினம். ஆதலின் அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் அது செய்யக் கூடாது. அவர்களுக்குப் பிறகு கான் சுதந்தரமாக வாழும்போது வெளிப்படையாகப் புலால் உண்பேன். அதுவரையில் புலாலத் தொடமாட்டேன் என முடிவு செய்தேன்.