பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

இருந்தால் இத்தனை காள் உம்மை மூட்டை கட்டி அனுப்பி யிருப்பேன். எழுத்துவாசசீன .ெ த ரி யாத தாயாரிடம் அளித்த வாக்குறுதியைக் கட்டிக் கொண்டு அழுவதா? மேலும் இங்குள்ள கிலேமை உமக்கு அப்போது தெரியாது. அத்தகைய வாக்குறுதியை விடாமல் பிடித்துக் கொண் டிருப்பது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. இந்தப் பிடிவாதத்தில்ை இங்கே உமக்கு எவ்வகைப் பயனும் உண்டாகாது. புலால் உணவை ர்ே முன்னம் தின்று அது உமக்குச் சுவைத்ததாக ஒப்புக் கொள்கிறீர். வேண்டாத நேரத்தில் புலாலே உண்டீர். இன்றியமையாததா யிருக்கும் இங்காட்டில் உண்ண மறுக்கிமீர்”-எண்று கடிங்து கொண்டார்.

ஒருநாள் மேற்படி நண்பர் காங்தியடிகளை ஒரு நாடகம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார். நாடகத் துக்கு முன்னுல் ஹால்பர்ன் உணவு விடுதியில் இருவரும் உணவு அருந்துவது என்று ஏற்பாடாயிற்று. இவ்வுணவு விடுதி ஒரு அரண்மனையைப் போல் விளங்கியது. காங்தி யடிகள் இதற்கு முன் இந்த உணவு விடுதிக்கு வந்ததில்லை. இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். முதலிலே குழம்பு பரிமாறப்பட்டது. என்ன குழம்பு என்று தெரிந்துகொள்ள அடிகள் விரும்பினர். ஆனல் கண்பரைக் கேட்க அவருக்குத் துணிவில்லை. உணவு பரிமாறியவனே அழைத்து, அவனிடம் கேட்க விரும்பினர்.

அதைக் கவனித்த கண்பர், ‘என்ன?’ என்று கடுமை யாகக் கேட்டார்.

‘குழம்பு புலால் கலப்பற்றதா?’ என்று கேட்க விரும்பு வதாகத் தயக்கத்துடன் கூறினர் காங்தியார்,

“நாகரிக மக்களின் கூட்டுறவுக்கு நீர் தகுதியற்றவர். சரியாக கடங்துகொள்ளத் தெரியாவிடில் வெளியே சென்று வேறெந்த உணவு விடுதியிலாவது சாப்பிட்டுவிட்டு எனக்