பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 58

லாம். ஆனல் அன்னேயின் கொள்கைப்படி அது புலால் உணவுதான் என்று எண்ணி, காங்தியடிகள் அதையும் தொடுவதில்லை. அடிகள் பாலையும் புலால் உணவே என்று விலக்கி வந்தார். ஆவின் குருதிதான் பாலாக மாறுகிறது. அப்படி யிருக்கும்போது அது எப்படிச் சைவ உணவாகும்: என்பது அடிகளின் வாதம். ‘பசு மனிதர்களுக்காக மடி சுரங்து பால் கொடுப்பதில்லை. அது தன் கன்றிற்காகவே பாலக் கொடுக்கிறது. அப்படி யிருக்கும்போது, அதன் பால மனிதன் பெறுவது திருட்டு என்று அடிகள் அருளறம் பேசினர். கல்கத்தாவில் பசுவிடமிருந்து மிகுதி யாகப் பால் பெறுவதற்காக மக்கள் செய்த கொடுமைகளை யும் வழிமுறைகளையும் கேட்டு மிகவும் உள்ளம் வருங்தினர். “ஒருமுறை கும்பமேளா'வைப் பார்ப்பதற்காக அடிகள் சென்றார். (கும்பகோணத்தில் ‘மகாமகம்’ என்று ஒரு பெருவிழா பன்னிரண்டு ஆண்டுகட்கொருமுறை தமிழகத் தில் கொண்டாடப்படுகிறதல்லவா? அதே போன்றதுதான் கும்பமேளாவும்..1 அங்கு ஐந்துகால் பசு இருப்பதாக யாரோ சொன்னர்கள். அவ் வித்தையைக் காண்பதற்காக அடிகளும் சென்றார், ஐந்தாவது கால் பொய்க்கால். ஏதோ ஒரு கன்றுக்குட்டியின் கால வெட்டி, ஒரு பசுவோடு ஒட்டி யிருந்தார்கள். மக்களே ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகச் செய்யப்பட்டிருந்த சூழ்ச்சி. இக் கொடுமையைக் கண்டு உளம் வருங்தினர் அடிகள். அதிலிருந்து பால் உண்பதையே பல்லாண்டுகள் விட்டு விட்டார்.

ஒருமுறை அடிகள் நோய்வாய்ப்பட்டார். வயிற்றில் ஒர் அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. அதல்ை அடிகள் உடல் மெலிங்து சாகும் கிலேக்கு வந்துவிட்டார். பால் உண்டால்தான் அடிகள் பிழைத்தெழ முடியும் என்று மருத்துவர் கூறி விட்டார். அதன் பிறகு மீராபென்னின் யோசனைப்படி ஆட்டுப்பால் சாப்பிட இசைங்தார்.