பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 59

காந்தியடிகள் பம்பாயில் வழக்கறிஞர் தொழில் கடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய இரண்டாவது மகளுன மணிலாலுக்குக் கடுமையான டைபாய்டு காய்ச்சல் வந்தது. ஏற்கனவே மணிலால் வைகுரி கோயில்ை அவதிப் பட்டிருந்தான். டைபாய்டு காய்ச்சலோடு கபவாதமும் சேர்ந்து கொண்டது. காய்ச்சல் மிகக் கடுமையாக இருந்த காரணத்தால் இரவில் பிதற்றலும் அதிகமாயிருந்தது.

மருத்துவர் ஒருவரை அடிகள் அழைத்து வந்தார். காய்ச்சலுக்கு மருந்து அதிகப்பயனை அளிக்காது என்றும், கோழி முட்டையும், கோழிக்குஞ்சுச் சாறும் (Soup) கொடுக்க வேண்டுமென்றும் கூறினர் மருத்துவர். காங்தி யடிகள் தாம் தீவிர சைவராயிற்றே! தம் கொள்கையை விட்டுக் கொடுக்க அடிகளுக்கு விருப்பமில்லை. ஆனல் மணிலாலோ அப்போது பத்து வயதுச் சிறுவன். அவனு டைய எண்ணத்தைக் கேட்டு முடிவு செய்வதற்கும் வழி யில்லை. அவனுக்காக அடிகளே முடிவு செய்தாக வேண்டும்.

‘காங்கள் சைவ உணவுக்காரர்கள். தாங்கள் சொன்னவற்றைத்தவிர வேறு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?’ என்று காங்தியடிகள் கேட்டார்.

‘மற்றக் காலங்களில் மரக்கறி உணவுக் கொள்கை ஏற்றதே. ஆனல் மைந்தன் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்றிருக்கும்போது பிடிவாதம் செய்யக் கூடாது. எவ் வளவோ தீவிர வைதிகர்களும், என்னுடைய யோசனைப் படி செய்திருக்கிறார்கள். தாங்களும் இக்குழங்தையின் பொருட்டுப் பிடிவாதம் செய்யாதிருப்பது கலம்’ என்று மருத்துவர் கூறினர்.

அதற்குக் காங்தியடிகள், “மருத்துவராகிய தாங்கள் தங்களுடைய கடமையைச் செய்து விட்டீர்கள். ஆனல் என்னுடைய பொறுப்பை நான் கைவிட முடியாது. வயது