பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60

வங்த பையனுயிருந்தால் அவனுடைய எண்ணத்தைக் கேட்டு அதன்படி செய்திருப்பேன். புலாலும் முட்டையும் மனிதன் உண்ணக் கூடாது என்பது என்னுடைய திட மான சமயக் கொள்கை. அது சரியோ தவருே தெரியாது. ஆலுைம் உயிர் வாழ்வதற்காகக் கூடச் சிற்சில காரியங்களே நாம் செய்யக் கூடாது. இது என் உறுதியான கம்பிக்கை. ஆகையில்ை தங்களுடைய யோசனையை நான் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். எனக்குத் தெரிங் திருக்கும் வேறு மருத்துவ முறைகளைக் கையாளப் போகி றேன். ஆனல் காடி பார்க்கவும், இருதயம்-துரையீரல் ஆகியவற்றைச் சோதனையிடவும் எனக்குத் தெரியாது. தாங்கள் அவ்வப்போது வந்து இந்தப் பரிசோதனைகள் மட்டும் செய்து சொல்லிவிட்டுப் போனுல் என் உளங் கலந்த நன்றியைச் செலுத்துவேன்’ என்று கூறினர்.

காந்தியடிகளின் சங்கடமான நிலையை உணர்ந்தார். மருத்துவர். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிப் போனர். அடிகள் தமக்குத் தெரிந்த மருத்துவ முறையைக் கையாண்டு மணிலாலைக் காப்பாற்றினர்.


கஸ்துரிபாய்க்குத் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி குருதி இழப்பு ஏற்பட்டு உடல் நலம் குன்றியிருந்தது. அறுவை மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னர்கள். டர்பனில் இருந்த புகழ் பெற்ற மருத்துவரிடம் அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. உடல் மெலிவு காரணமாக, மயக்க மருந்து கொடாமலேயே அறுவை கடத்த வேண்டியிருந்தது. இதல்ை ஏற்பட்ட வலியையும், பெருங்துன்பத்தையும் அன்னே கஸ்தூரிபாய் வியக்கத்தகுந்த முறையில் பொறுத்துக்கொண்டார். மருத்துவரும், செவிலி (Nurse) யாகப் பணி புரிந்த அவருடைய மனைவியாரும், கஸ்தூரி