பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.3

முடிவுக்கும் வரக்கூடாது என்று எடுத்துச் சொன்னர். வைதிக இங்துக்கள் பலர் மருத்துவத்திற்காக மது, புலால் உண்டதை எடுத்துக் காட்டினர். அதெல்லாம் கஸ்தூரி பாயின் மன உறுதியை அசைக்கவில்லை.

‘முடியாது! முடியவே முடியாது! என்னே இங்த இடத்திலிருந்து உடனே அப்புறப்படுத்துங்கள். இங்கு இருக்கவே நான் விரும்பவில்லை!” என்றார் கஸ்தூரிபாய். கஸ்தூரிபாயின் மனஉறுதி அடிகளுக்கு மிக்க மகிழ்ச்சி யைத் தங்தது. ஆயினும் பொறுப்பின் நிறை மிகுந்தது. கஸ்தூரிபாயின் கருத்தை மருத்துவரிடம் கூறியபோது அவர் மிகவும் கடுமையாகப் பேசினர்.

“எத்தகைய ஈவிரக்கமற்ற மனிதரையா ர்ே? கோயாளி யிடம் இதைப்பற்றிக் கேட்க உமக்கு வெட்கமாயில்லையா? அப்புறப்படுத்தக் கூடிய கிலேயில் உம் மனைவியில்லே. ஒரு கால், வழியில் செத்துப் போனலும் போகலாம். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். என் கடமை தீர்ந்தது. அப்புறம் உங்கள் விருப்பம்’ என்றார் மருத்துவர்.

கஸ்தூரிபாயை எப்படியாவது காப்பாற்ற விரும்பிய இந்த வெள்ளைக்கார மருத்துவரை காம் பாராட்டாம லிருக்கமுடியாது. மருத்துவர் சொன்னபடி இந்தக் காங்தி கேட்டால்தான் என்ன? என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான், ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்ற பழ மொழியின் மேல் பாரத்தைப் போடவும் கம்மில் பலர் தயார்தான்.

ஆனல் அடிகளின் உளப்போக்கும், கஸ்தூரிபாயின் பிடிவாதமும் வேறுவிதமாயிருந்தன. ‘உயிர் போனலும் கொள்கையைக் கைவிடக்கூடாது’ என்பதில் அவர்கள் இருவரும் உறுதி கொண்டிருந்தார்கள். அடிகள், அன்னே யாரை மருத்துவ மனையினின்றும் அகற்றிச் சென்றார்.