பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 65

என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், கலீலியோ வின் காலத்தில் பொய்யாக்கப்பட்டன. அவரே பொய்ப் பித்துக் காண்பித்தார். கியூட்டன் காலத்திய விஞ்ஞானக் கொள்கைகள் ஐன்ஸ்டீன் காலத்தில் பொய்யாக்கப் பட்டன. எனவேதான் விஞ்ஞானிகள் புராணிகர்களை விட மோசமானவர்கள் என்று பெர்னர்டுஷா குறிப்பிட்டார்.

அதேபோலத்தான் மருத்துவர்களும். என்புருக்கி கோயின் தடுப்பு மருந்தான பி. சி சி. மக்களினத்திற்குச் சஞ்சீவி எனக் கருதப்பட்டது. ஆனல் பிற்காலத்தில், அதைப் போற்றி கூறிய விஞ்ஞானிகளே அதன் குறை பாட்டை விளக்க ஆரம்பித்து விட்டனர். பென்சிலின் இரண்டாம் உலகப்போரில் செயற்கரிய செயல்களையெல் லாம் செய்து காட்டியது ஆல்ை அம்மருந்து அபாயகர மானது என்று இப்போது மருத்துவர்களால் எச்சரிக்கப்படு கிறது. முதலில் நோய்வாய்ப்பட்டு ஒருமருத்துவரிடம் சென் ருல் நோய் என்ன என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிவ தில்லை. முதலில் ஒரு மருந்து கொடுக்கிறார். பிறகு அதன் பலாபலனைப் பார்த்துக்கொண்டு வேறு மருந்து கொடுக் கிரு.ர். இறுதியில் அங்நோயாளியின் உடல் மருத்துவரின் சோதனைக்களமாக மாறிவிடுகிறது. இக்காரணங்களேயெல் லாம் நன்குணர்ந்த காங்தியடிகள் மருத்துவர்களிடம் அதிக கம்பிக்கை வைப்பதில்லை.

மருத்துவர்களால் பிழைக்கமுடியாது’ என்று கை விடப்பட்ட நோயாளிகளேயெல்லாம் காங்தியடிகள் குணப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார். பார்ச்சூர் சாஸ்திரியின் தொழுநோய் மருத்துவத்தைப் பற்றிப் படித்தோம். வட காட்டில் தலைசிறந்த மருத்துவ மனேகட்கெல்லாம் சென்று முயன்று பார்த்தவர் பார்ச்சூர் சாஸ்திரி. தொழுநோய்க்கு மருங்தே கிடையாது என்று எண்ணிய காலம் அக் காலம், அக்காலத்தில் வியக்கத்தக்க முறையில் அங்கோயைப் பெரு மளவு குணப்படுத்தி வெற்றி கண்டார் காங்தியடிகள்.