பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தம்மகளுன மணிலால் காங்தி டைபாய்டு காய்ச்சலி ளுல் சாகும் நிலையில் இருந்தானென்று சென்ற தலைப்பில் படித்தோம், அங்கோயைக் காங்தியடிகள் நீர்மருத்துவத் தின் மூலம் குணப்படுத்தினர்.

ஜெர்மானியரான டாக்டர் கூன் என்பவர் ர்ே மருத்துவ முறையைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிரு.ர். அதில் ஆசனக் குளிப்பு’, ‘இடுப்புக் குளிப்பு ஆகிய முறை களினல் நோய் தீர்க்கும் முறையைப் பற்றி எழுதியிருக் கிரு.ர். காந்தியடிகள் அந்நூலில் கண்ட முறைகளை ஏற் கனவே சோதனை செய்திருந்தார். இப்போது மணி லாலுக்கு இடுப்புக் குளிப்பு'ச் செய்வித்தார். தொட்டி நீரில், மூன்று கிமிடம் முழங்காலுக்கு மேலே தொப்புளுக் குக் கீழே தண்ணிர் இருக்கும்படி உட்காரவைத்து வெளியே எடுத்தார். இதை அடிக்கடி செய்ததுடன் ஆரஞ் சுப் பழச்சாறும் தண்ணிரும் கலந்து உணவாகக் கொடுத் தார்.

மூன்று நாள் இப்படிச் செய்து வந்தும் பயன் தெரிய வில்லை. 104 டிகிரி வரையில் காய்ச்சல் அடிக்கடி ஏறிக் கொண்டிருந்தது. காங்தியடிகள் கவலையடைந்தார். தம் முடைய பிடிவாதம் குழங்தைக்கு ஆபத்தாக முடிந்துவிட் டால் என்ன செய்வது? தம்முடைய மருத்துவக் கொள்கை யைக் குழங்தை மேல் கமத்துவது கியாயமாகுமா ? வேறு மருத்துவரைக் கூப்பிட்டால் என்ன ? அல்லது ஆயுர்வேத மருத்துவரை அழைத்துக் காட்டினல் என்ன? என்றெல் லாம் உள்ளம் குழம்பினர்.

இந்த எண்ணங்களுக்கு இடையே மாருன எண்ணங் களும் தோன்றின. மருத்துவர்கள் மட்டும் குணப்படுத்தி விடுவதாக உறுதி கொடுக்கிறார்களா? அவர்களும் சோதனை தானே செய்கிறார்கள் என்று கினைத்தார். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. எழுங்து ஒரு நீளமான துணியைத்