பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 7

தண்ணிரில் நனைத்துப் பிழிந்து மணிலாவின் உடல்மீது தலையை மட்டும் விட்டுவிட்டுச் சுற்றினர். தலையில் தனி யாக ஒர் ஈரத்துண்டைச் சுற்றினர், பிறகு இரண்டு கனமான கம்பளிகளைப் போட்டுக் குழந்தையைப் போர்த்து விட்டார். அப்போது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல் குழங்தையின் உடம்பு கொதித்தது. ஆனல் ஒரே வரட்சி; கொஞ்சம்கூட வியர்வையில்லை.

மணிலாலைச் சற்று நேரம் அவனுடைய அன்னையிடம் ஒப்புவித்துவிட்டு வெளியே சிறிது உலாவச் சென்றார். செளபாத்திக் கடற்கரைக்குப் போனர். அப்போது இரவு மணி பத்து. கடற்கரையில் இவரைத் தவிர இன்னும் இரண்டொருவர் உலாவிக் கொண்டிருந்தார்கள். காந்தி யடிகள் அங்குமிங்கும் கடந்துகொண்டே கடவுளேத் துதித் தார். “ஆண்டவனே இந்தச் சோதனை நேரத்தில் என் னுடைய கம்பிக்கையைப் பாதுகாத்தல் உன்னுடைய பொறுப்பு!” என்று முறையிட்டார். அவருடைய உதடுகள் இராமநாமத்தை இடைவிடாது கூறிக் கொண்டிருந்தன. சிறிது நேரம் உலாவிய பிறகு வீட்டுக்குத் திரும்பினர். குழங்கையின் கிலே யாதோ என்று நெஞ்சு கலக்கமுற் மிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், ‘பாபு! வந்துவிட்டீர்களா?” என்று மணிலாலின் குரல் கேட்டது.

‘வங்துவிட்டேனடா, கண்மணி!” என்று சொல்லிக் கொண்டே அருகில் போனர்.

“உடம்பு பற்றி எரிகிறது. துணியையும் கம்பளியை யும் எடுத்துவிடுங்கள்.”

“குழங்தாய்! உடம்பு வியர்த்திருக்கிறதா ?”

‘வியர்வை வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன். சிக்கிரம் எடுங்கள்."