பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

குழந்தையின் நெற்றியை அடிகள் தொட்டுப் பார்த் தார். முத்து முத்தாய் வியர்வை துளித்திருந்தது; காய்ச் சலும் குறைந்திருந்தது. ஆண்டவனுக்கு உளங்கலங்த நன்றியைச் செலுத்தினர்.

‘மணிலால்! காய்ச்சல் இனிக் கட்டாயம் குணமாகி விடும். இன்னும் சிறிது வியர்க்கட்டும்.’

“அப்பாl இனி ஒரு நிமிடமும் இந்த உலேக்களத்தில் என்னல் இருக்க முடியாது. தயவுசெய்து உடனே எடுத்து விடுங்கள். வேண்டுமானல் மறுபடியும் துணி சுற்றிக் கொள்ளலாம்.”

பேச்சுக் கொடுத்துக்கொண்டே இன்னும் சில கிமிடம் வைத்திருங்தார். நெற்றியிலிருந்து வியர்வை வழித்து அருவி யாக ஒடிற்று. பிறகு கம்பளிகளையும், சரத் துணியையும் எடுத்துவிட்டு உடம்பைத் துடைத்தார். மணிலால் உறக்கம் வருகிறது என்றான். அடிகளுக்கும் உறக்கம் வந்தது. தங்தையும் மகனும் ஒரே படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்கள். மறுநாள் காலேயில் காய்ச்சல் மிகவும் குறைந்திருந்தது. ஆலுைம் அடியோடு போகவில்லை. பாலும் பழச்சாறும் அருங்திக்கொண்டு காற்பது நாள் படுக்கையில் இருக்கவேண்டி வந்தது. பிறகு நோயினின்றும் மணிலால் மீண்டான். கஸ்தூரிபாய் மருத்துவமனையி லிருந்து போனிக்ஸ் பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, காங்தியடிகள் இதே நீர் மருத்துவ முறையைக் கையாண்டே அன்னேயாரைக் குணப்படுத்தினர்.

 *

காங்தியடிகள் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்த போது அவருக்குப் பாரிசவாயு நோய் கண்டிருந்தது. டாக்டர் ஜீவராஜ் மேதா என்பவர் அடிகளுக்கு மருத்துவம் செய்துவந்தார். மருத்துவர் குறிப்பிட்ட உணவு வகைகளைக் காங்தியார் உட்கொள்ள முடியவில்லை. கிலக்கடலே, வா ைமு ப் பழ ம், எலுமிச்சம்பழம், தக்காளிப்பழம்,