பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

திராட்சைப்பழம் ஆகியவையே அப்போது காந்தியடிகளின் உணவாக இருந்தன. பருப்பு வகைகளையும், தானியங் களையும் உட்கொள்ளுவதை அடியோடு விட்டிருந்தார். பாலும் சாப்பிடுவதில்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது திருவாளர் கோகலே பாரிசிலிருந்து இலண்டன் வங்து சேர்ந்தார். மருத்துவர் கூறும் உணவை உட்கொள்ளுமாறு காந்தியடி களே வற்புறுத்தினர். காங்தியாருக்கோ தம் உணவுக் கொள்கையை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை. நெடுநேர வற்புறுத்தலுக்குப் பிறகு, யோசனை செய்வதற்காகத் தமக்கு இருபத்து நான்கு மணி நேரம் வேண்டுமென்று காங்தியடிகள் சொன்னர். ஒருநாள் முழுதும் யோசனை செய்துவிட்டுத் தமது முடிவைப் பின்வருமாறு தெரிவித் தார் :- “தானியங்களும் பருப்பு வகைகளும் உட்கொள்ளு கிறேன். ஆனல் பாலும் புலாலும் உட்கொள்ளமாட்டேன். பாலையும், புலாலையும் உட்கொள்ளுவதைவிடச் சாவே மேல். தயவுசெய்து என்னே மன்னிக்க வேண்டும்.’

மகாத்மாவின் இந்த முடிவு திரு. கோகலேயுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவருடைய ஆத்ம சாதன கோக் கத்தையும், கொள்கையில் உறுதியையும் கருதி, மருத்துவ ரிடம், ‘காங்தி ஒப்புக்கொண்ட வரையிலும் சரி. மேலும் அவரைத் தொல்லைப்படுத்த வேண்டாம்’ என்று கூறினர். மருத்துவர் கூறியபடி காங்தியடிகள் உணவை ஓரளவு மாற்றிக்கொண்டார். மேலுக்கு மருந்து தடவிக் கொண் டார். ஒரு பயனும் ஏற்படவில்லை. டாக்டர் அல்லின்சன் என்பாரின் யோசனைப்படி பச்சைக் காய்கறிகளை உண்டுப் பார்த்தார். அதலுைம் பயன் ஏற்படவில்லை. பிறகு கப்பலேறி இந்தியாவுக்குப் புறப்பட்டார். கப்பல் சூயஸ் கால்வாயை அடைந்ததும் அவருக்கு உடம்பு முழுக் குண மடைந்துவிட்டது. கடற் பயணத்தின் தூய்மையான

ம. 11