பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

காற்றே தாம் குணமடைந்ததற்குக் காரணம் என்று கூறினர்.

  • }: $:

முதலாம் உலகப் போர் கடந்து கொண்டிருங்க காலத் தில், ஆங்கில அரசாட்சிக்குத் துணை செய்ய வேண்டு மென்பது காந்தியடிகள் கொள்கை. ஆகையில்ை ஊர் ஊராகச் சென்று போருக்கு ஆள் திரட்டும் பணியில் தீவிர மாக ஈடுபட்டார். இடைவிடாத உழைப்பின் காரணமாக அவருடைய உடல்நிலை கெட்டு வயிற்றுக் கடுப்பு நோய் வந்துவிட்டது. ஒருநாள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப் பட்டு நதியாத்துக்குப் போகத் திட்டம் போட்டிருந்தார். ஆசிரமத்திலிருந்து ஒன்றேகால் கல் தொலைவிலிருந்த புகை வண்டி நிலையத்திற்கு நடந்தே சென் ருர். ஆமதாபாத்தில் அவருடன் சேர்ந்துகொண்ட வல்லபாய்படேல் காங்தியடிகள் உடல் நலமின்றியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டார். திரும்பிவிடலாம் என்று படேல் வற்புறுத்தியதைக் காந்தி யடிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரவு பத்து மணிக்கு இருவரும் கதியாத் கிலேயத்தில் இறங்கி அநாதை ஆசிர மத்தை அடைந்தார்கள். அங்கே அடிகளுக்கு வயிற்றுக் கடுப்பு நோய் மிகவும் கடுமையாகிவிட்டது. நண்பர்கள் கவலைகொண்டு மருத்துவரை அழைத்து வந்தார்கள். ஆளுல் காந்தியடிகளோ மருத்துவம் செய்துகொள்ளவும் மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார். ஊசி குத்திக் கொள்ளவும் இணங்கவில்லே. பட்டினி கிடங்கால் சரியாகப் போய்விடும் என்று கம்பிக்கை தெரிவித்தார். இருபத்து நான்கு மணிநேரம் பட்டினி கிடக்த பிறகு பசியே இல்லாமல் போய்விட்டது. உடல் மெலிந்து வலி குன்றியது. வயிற்றுப் போக்கோடு காய்ச்சலும், பிதற்றலும் சேர்ந்துகொண்டன. காந்தியார் சாவு தம்மை நெருங்கிவிட்டது என்று கம்பினர். அம்பலால் சாராபாய் முதலிய நண்பர்கள் ஆமதாபாத்தி லிருந்து அவரைப் பார்க்க வங்தார்கள். தம்மை ஆசிரமத்