பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 71

தில் கொண்டுபோய் விடும்படி அவர்களைக் கேட்டுக் கொண் டார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

சபர்மதி ஆசிரமத்தில் காங்தியடிகள் யமனேடு போரா டிக் கொண்டிருந்த சமயத்தில், போர் முடிந்து விட்ட தென்றும், இனிமேல் ஆள் திரட்ட வேண்டியதில்லை யென்றும் ஆணையாள (Commissioner)ரிடமிருந்து செய்தி வங்தது. அந்தச் செய்தியை வல்லபாய் படேல் காந்தியடி களிடம் கூறினர். மகாத்மாவின் உள்ளத்திலிருந்த பாரம் இறங்கியது. கொஞ்சம் கொஞ்சமாகக் காந்தியடிகளின் உடம்பு குணமடையத் தொடங்கியது. நீர் மருத்துவம், பனிக்கட்டி மருத்துவம் முதலிய இயற்கை வைத்திய முறை களைக் கடைப்பிடித்து வந்தார். நோய் நீங்கிய பிறகும் உடம்பில் பழைய வலிமை வருவதற்கு நெடுநாள் ஆயிற்று:

திரான்ஸ்வாலின் தலைநகரமான ஜொகன்னஸ்பர்க்கி லிருந்த கூலிச் சேரியில் பிளேக் (Black Plague) என்னும் கொள்ளை நோய் பரவியிருந்ததென்றும், அங்நோயைப் போக்கும் பணியில் தம் உயிரையும் பணயம் வைத்துக் காந்தியடிகள் உழைத்தார் என்றும் நாம் படித்தோம். காந்தியடிகளுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் துணை யாக இருந்த கூலிச் சேரியில் பணிபுரிவதற்காக நகரசபை யாரால் ஒரு செவிலிப் பெண் அனுப்பி வைக்கப்பட்டாள். அவள் அன்புள்ளம் கொண்டவள். நோயாளிகளுக்குத் தானே பணிவிடை செய்வதாகச் சொன்ள்ை. ஆனல் நோயாளிகளே அவள் தொடும்படி மற்றவர்கள் விடவில்லை.

பிளேக்குக்குப் பிராங்தி ஒரு மருந்து என்று கருதப் பட்டது. நோயாளிகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டு மென்றும், பணிவிடை செய்பவர்களும் அடிக்கடி பிராங்தி சாப்பிட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது. செவிலி, அவ்விதமே பிராங்தி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனல் காந்தியடிகளும் அவர் கண்பர்களும் பிராங்தியைத் தொட