பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ? 2

வில்லை. நோயாளிகளில் மூன்று பேர் பிராந்தி குடிக்காமல் மருத்துவம் செய்துகொள்ள இணங்கினர்கள். அவர் களுக்குக் காங்தியடிகள் தலையிலும் மார்பிலும் ஈர மண்ணை வைத்துக் கட்டினர். மூன்று பேரில் இருவர் பிழைத்தனர். ஒருவர் இறந்து விட்டார். பிராங்தி குடித்து வழக்கமான மருத்துவம் பெற்ற இருபது பேரும் மாண்டு போனர்கள். பாவம்! பிராங்தி குடித்துத் தன்னை காப்பாற்றிக் கொள்ள விரும்பிய செவிலியும் கொள்ளே கோயினல் பீடிக்கப்பட்டு இறந்து போனள். காந்தியடிகளையும் அவருடைய கண்பர் களேயும் தொற்றுநோய் பீடிக்கவில்லை. இதிலிருந்து பிராங்தியை மருங்தாகச் சில சமயங்களில் பயன்படுத்துவது முழுத் தவறு என்ற முடிவுக்கு காந்தியடிகள் வந்தார்; ஈர மண் மருத்துவத்தில் அவருடைய கம்பிக்கையும் அதிக மாயிற்று.

மண் சிறந்த மருந்து என்பது அவருடைய கொள்கை. பூமித்தாய் எல்லாவிதப் பொருள்களையும் தன்னகத்தில் அடக்கிக் கொண்டிருக்கிருள். எனவே மண் இயற்கையாக அமைந்து கிடக்கும் மருங்து என்று காங்தியடிகள் கூறினர். காந்தியடிகளுக்கு இளமையிலிருக்கே மலச்சிக்கல் உண்டு. மலச்சிக்கல்களுக்கு எல்லா மருங்தையும் விட ஈர மண்ணே அவருக்கு ஏற்ற மருந்தாக இறுதிக் காலம் வரையிலும் விளங்கியது.

 *

காந்தியடிகள் மகன்வாடியில் தங்கியிருந்த போது, ஒரு நாள் 17 அல்லது 18 வயதுள்ள ஒரு இளைஞன் வங்தான். அவன் ஒருவகை நரம்புத் தளர்ச்சி(Chorca)யால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். அவன் உறுப்புக்கள் எப்பொழு தும் நடுக்கம் (St Witus’s dance) கொண்டு இருக்கும். அவன் காந்தியடிகளிடம், “பாபு: இங்கோயினுல் நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு வாழ்க்கையே மிகவும் கசந்து விட்டது. இக்கோயில்ை கான் யாருக்கும் எக்த விதமான