பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ? 4

நோயை அடியோடு போக்கிக் கொண்டான். கோய் குண மடைந்ததும், காந்தியடிகளின் கல்வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு தொழில் கல்வி பயில்வதற்காக அமெரிக்க காட் டுக்குச் சென்று விட்டான்.


ஒருதடவை திருவாளர் ஜே. சி. குமரப்பா தமக்கு இரத்தக் கொதிப்பு இருப்பதாக உணர்ந்தார். உடனே பம்பாயிலிருந்த ஒரு சிறந்த மருத்துவரிடம் சோதனைக் காகச் சென் ருர். அந்த மருத்துவர் இரத்தக் கொதிப்பு நோயைப்பற்றி நன்கு உணர்ந்தவர். அவர் குமரப்பாவை கன்கு சோதனை செய்தார். இரத்தக் கொதிப்பு உங்களுக்கு காம்புகளின் களைப்பால் ஏற்படுகிறது. உடலில் எவ்விதக் கோளாறுமில்லை’ என்று கண்டறிந்து கூறினர். குமரப்பா காங்தியடிகளிடம் திரும்பி வங்து மருத்துவர் சொன்னதைக் கூறினர். இதைக் கேட்ட காங்தியடிகள் தம் இயற்கை மருத்துவத்தைத் துவக்கினர்.

முதலில் காம்புகளின் களேப்பு உடலுழைப்பால் ஏற்படுகிறதா? அல்லது மூளையின் உழைப்பால் ஏற்படு கிறதா? என்று கண்டறிய விரும்பினர். அதை உணரா விட்டால் கோய்க்கு மருத்துவம் செய்வதெப்படி? ஒருநாள் லாகூர் கல்லூரிப் பேராசிரியரான ஒரு மாது, சில கடின மான கருத்துக்களைப்பற்றிக் காந்தியடிகளிடம் பேசிச் செல்ல வங்தார். அப் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளாமல் அம் மாதைக் குமரப்பாவிடம் அனுப்பினர். பேச்சுத் துவங்கு முன்பாகத் திருமதி சுசீலா கய்யாரை அழைத்துக் குமரப்பாவின் இரத்த அமுக்கத்தைக் கணக் கிடச் சொன்னர் அவ்வுரையாடல் 15 கிமிடம் நிகழ்ந்தது. அவ்வுரையாடல் முடிந்த பிறகு மீண்டும் இரத்த அமுக்கத் தைக் கணக்கிடச் சொன்னர். அப்போது இரத்த அமுக்கம் 15 எண்கள் அதிகமாக இருந்தது.