பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

அடுத்த நாள் காங்தியடிகள் தொழிற்கூடத்தின் நிர்வா கியை அழைத்து ஒரு மரப்பலகையில் கோடுபேண்டச் சொன்னர். குமரப்பாவின் கையில் ஒரு ரம்பத்தைக் கொடுத்து, அந்தக் கோட்டின் மேலேயே அறுக்குமாறு சொன்னர். அவ் வேலையைத் துவக்குவதற்கு முன்பும் பின்பும் இரத்த அமுக்கம் எடுக்கப்பட்டது. இப்போது இரத்த அமுக்கம் 30 எண்கள் அதிகமாக இருந்தது.

மூன்றாம் காள் ஒர் உடற்பயிற்சி ஆசிரியை அழைத் தார். குமரப்பாவை ஒரு பர்லாங்கு தாரம் ஒடுமாறு சொன்னர். ஒடுவதற்கு முன்பும் இரத்த அமுக்கம் குறித் துக் கொள்ளப்பட்டது. உடற் பயிற்சி ஆசிரியர் குமரப்பா வோடு ஓடிவந்து அவர் கின்றதும் இரத்த அமுக்கத்தைக் கணக்கிட்டார். இப்போது இரத்த அமுக்கம் 15 எண்கள் குறைந்திருந்தது. நாடித் துடிப்புச் சரிகிலேயில் இருந்தது. இச் சோதனைகளிலிருந்து குமரப்பாவின் குருதிக் கொதிப்பு உடல் உழைப்பால் ஏற்படுவதென்று மூளை உழைப்பால் கான் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிக் தார். குருதிக் கொதிப்பைப் போக்கிக் கொள்ள மருத்துவ மும் சொன்னர்.

‘குமரப்பா! குருதிக் கொதிப்பு உங்கள் உடலில் ஏற் பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடன், நீங்கள் மூளை உழைப்புக்கு ஓய்வளித்துவிட்டு உடலுழைப்பை மேற் கொள்ள வேண்டும். அப்போது கடப்பது நல்ல மருந்து. மேலும் காலை 11 அல்லது 13 மணிவரை வேலைசெய்த பிறகு இடையில் இரண்டு மணி நேரமர்வது ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அதற் குமேல் உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யலாம். அதோடு உங்கள் உணவையும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அசீரணம் ஏற்படா மல் பார்த்துக் கொள்ளவேண்டும். அசீரணம் மூளைக்குக் களைப்பையும் நோயையும் தரும்” என்று சொன்னர் காங்தி யடிகள். அன்றிலிருந்து காந்தியடிகளின் அறிவுரையை