பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மேற் கொண்டு குமரப்பா ஒழுகி வந்தார். குருதிக் கொதிப் புக்கு அடிகளின் மருத்துவம் மிகவும் ஏற்றதாக அமைந்தது.

  • *

காந்தியடிகள் இயற்கை மருத்துவமுறையில் தென்னப் பிரிக்காவில் வாழ்ந்த காலத்திலிருந்தே பேரூக்கம் காட்டினர். அதற்காகப் பல பரிசோதனைகளே நடத்தினர். தால்ஸ்தாய் பண்ணையில் அச்சோதனைகளே நடத்த வேண்டிய வசதிகள் இருந்தன. பண்ணையில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் மருத்துவரைக் கூப்பிடுவதில்லை. காந்தியடிகள் இயற்கை மருத்துவ முறையைக்கொண்டே எல்லா நோய்களையும் குணப்படுத்தி வந்தார். இவரிடம் இயற்கை மருத்துவம் செய்து கொள்வதற்காக பண்ணைக்கு வெளியே அக்கம்பக்கத்திலிருந்த மக்களும் வந்தார்கள். தால்ஸ்தாய் பண்ணைக்குச் சற்று தூரத்தில் புகைவண்டி கிலேயம் ஒன்று இருந்தது. புகைவண்டி கிலேயத் தலைவரின் குழங்தைக்கு - இரண்டு வயது - டைபாய்டு கண்டது. அதை இயற்கை மருத்துவ முறையைக் கையாண்டு குணப் படுத்தினர். இயற்கை மருத்துவ முறையில் தாம் பெற்ற பட்டறிவைக்கொண்டு. ஆரோக்கியவழி’ என்ற ஓர் அருமையான நூலும் எழுதியிருக்கிறார் காங்தியடிகள்.

ஆனல் இந்தத் துறையிலேயும் காங்தியடிகள் எழுதி யுள்ள எச்சரிக்கையை நாம் கவனித்து உள்ளத்தில் வைத்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த எச்சரிக்கை வருமாறு :- “இம்மாதிரி பல சோதனைகளே கான் தால்ஸ் தாய் பண்ணையில் கடத்தினேன். ஒன்றில்கூடத் தோல்வி யடைய வில்லை. ஆனல் கான் கைக்கொண்டிருந்த முறை களில் அப்போதிருந்த உறுதி இப்போது எனக்குக் கிடை யாது. 1919-ஆம் ஆண்டில் இங்தியாவுக்கு வங்த பிறகு எனக்கு வயிற்றுக் கடுப்பு கோய் வந்தது அதை என்னல் இயற்கை மருத்துவத்தின் துணைகொண்டு குணப்