பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 79

களேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தாரோ என்னவோ? காங்தியடிகள் தென்னப்பிரிக்காவில் இருந்தபோது, ஐங்து ஆண்டுகள் வெறும் பழ உணவையே உண்டு வாழ்ந்தார். அதைப்பற்றி அவர் குறிப்பிடும்போது, ‘தனித்த பழ. உணவு மட்டுமே உண்டு வாழ்ந்த ஐந்தாண்டுக் காலம் நான் உடல் கலத்தோடு இருந்ததுபோல், வேறு எங்தக் காலத் திலும் இருந்ததில்லை. அந்த காலத்தில் என் உழைப்புச் சக்தி மிகுதியாக இருந்தது. நாள் ஒன்றுக்கு எளிதாக காற்பது கல் கடப்பேன். குறிப்பிட்ட ஒருநாள் ஐம்பது மைல் கடந்திருக்கிறேன். இவ்வாறு உடலுக்கு ஏற்பட்ட கலத்தையல்லாமல், பழ உணவு என் ஆன்ம வளர்ச்சிக்கும் உறுதுணையாயிருந்தது, என்று உறுதியாகக் கூறுவேன். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, தனித்த பழ உணவு மட்டும் சாப்பிட முடியாமல் வேறு உணவும் சேர்த்துக் கொள்ளும்படி கேரிட்டது. அதை எப்போது கினைத்தாலும் எனக்கு வருத்தம் உண்டாகாமலிருப்பதில்லை’ என்று கூறுகிறார்,

உணவைச் சமைப்பதில் கம் நாட்டில் இப்பொழுது வழங்கும் முறைகளைக் காந்தியடிகள் எப்போதும் சரி யென்று ஒத்துக் கொள்வதில்லே. உண்ணவேண்டிய பொருள்களைத் தீயின் மீதிட்டு வேகவைக்கவே தேவையில்லை என்பது அவருடைய கருத்து. வெயிலில் கிடப்பதால் எவை பக்குவமாகி விடுகின்றனவோ, அவைகளே காம் உண்ப தற்குப் போது மானவை. அவைகளே மீண்டும் அடுப்பி விட்டு வேகவைப்பது அவற்றிலுள்ள சத்தைக் கெடுப்ப தாகும்’ என்று சொல்லுகிறர்.

ஒரு சமயம், தானியங்களே நீரில் ஊறவைத்து முளை கிளம்பச் செய்து முளேத்த தானியங்களேச் சாப்பிட்டு வரு வோமானல் பெண்களுக்கு அடுப்பு ஊதும் வேலேயே இல்லாமல் போய்விடும்; செலவும் மிச்சமாகும் என்ற