பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

எண்ணம் காங்தியடிகளுக்கு ஏற்பட்டது. முளே கண்ட தானியங்களே கன்றாக மென்று தின்ன வேண்டியிருப்பதால் வேகவைத்த தானியத்தைவிடக் குறைவாகவே அவை செல வாகும் என்ற எண்ணமும் இருந்தது. உடனே ஊறவைத்த பச்சைத் தானியத்தை உணவாகமேற்கொள்ளத் தொடங்கி விட்டார். அவ்வளவு செரிக்காததோடு, வயிற்றுக் கடுப் பையும் உண்டாக்கி விட்டது. ஆல்ை அடிகள் அதைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களிடமும் சொல்லாமல் தம் சோதனையிலேயே மூழ்கியிருந்தார். மலத்தில் குருதி கொட்டிக் கிடப்பதைக் கண்ட மகாதேவதேசாய் இதைப் பற்றி அடிகளிடம் வினவினர்.

“ஒன்றுமில்லை! சிறு சோதனை! துவக்கத்தில் கொஞ்சம் தொல்லையாகத்தான் இருக்கும். பிறகு சரியாகப் போய் விடும்! குருதியா கொட்டிக் கிடக்கிறது? நான் கவனிக்க வில்லை'-என்று கூறிவிட்டு அவர் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கடத்தினர். கிலேமை மிகவும் மோசமாகிக் கொண்டு வந்தது. சீதம் கொட்டத் தொடங்கி விட்டது. அடிகளின் உடலும் மெலிந்தது. என்றாலும் சோதனையைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டார். அவரை அச் சோதனையிலிருந்து மீட்பது பெரும்பாடாகிப் போய் விட்டது.


$ ஒரு தடவை காந்தியடிகள் இரவீந்திரகாத தாகூரைக்

காண்பதற்காகச் சாங்தி நிகேதனம் சென்றிருந்தார். தாகூரினிடம் காங்தியடிகளுக்கு அளவு கடந்த மதிப்பும் பற்றும் உண்டு. காங்தியடிகளைக் கண்டதும் தாகூர் வர வேற்க எழுந்தார். தாகூர் உயர்ந்த வடிவமும் கம்பீரமான தோற்றமும் படைத்தவர். அவருடைய நீண்ட அங்கியும், வெண் தாடியும் அவருடைய தோற்றத்திற்கு இணையற்ற சிறப்பை அளித்தன. காந்தியடிகள் மெலிந்த உடலை உடை யவர். உயரமானவர் என்றும் சொல்ல முடியாது. இடுப்