பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8

போல் மேற்சட்டையும் காற்சட்டையும் வாங்கிக்கொடுத்து அணியுமாறு செய்தார். காலுறைகளும், மூடு செருப்பும் இன்றியமையாதவை என்று சொல்லத் தேவையில்லே. கஸ்தூரிபாய்க்கும் குழங்தைகளுக்கும் அவை பழக்கமாவ தற்கு மீண்ட காட்கள் சென்றன. செருப்பால் இறுக்கப் பட்டு பாதங்கள் நசுங்கிப் புண்ணுயின. என்றாலும் காங்தி யடிகளின் வற்புறுத்தலுக்கும், பிடிவாதத்துக்கும் அஞ்சி அவர்கள் தொடர்ந்து அணிய வேண்டியதாயிற்று.


ஆனல் காலப் போக்கில் அவருடைய ஆடையைப் பற்றிய கொள்கை மாறுபடத் தொடங்கியது. தென் னப்பிரிக்க உரிமைப் போராட்டத்தின் போது இந்தியக் கூலிகளோடு ஒன்றி வாழ நேரிட்டது. அதல்ை அவர்களைப் போலவே எளிய உடையைத் தரிக்கத் தொடங்கினர். ஆனல் இதுவும் பாதி மேட்ைடு முறையில் இருந்தது. தென்னப்பிரிக்காவை விட்டு இங்கிய நாடு திரும்பிய போது, கத்தியவார் பிரமுகர்கள் உடுக்கும் உடை தரித்திருந்தார். இங்த உடையில் வேட்டி, உட்சட்டை, நீண்ட மேலங்கி, மேல் துண்டு, தக்லப்பாகை ஆகியவை இருந்தன. பம்பாயி லிருந்து இராசகோட்டைக்குக் கிளம்பியபோது மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய முடிவு செய்தார். அத்துடன் கத்தியவார் உடையில் நீண்ட மேலங்கியையும், மேல் துண்டையும் புறக்கணித்து விட்டார். வெப்ப காட்களில் இவைகளே யெல்லாம் சுமந்துகொண்டு ஆலேவது இவருக் குப் பெரிய தொல்லையாகவும் பட்டது. அலங்காரமான தலைப்பாகையை விலக்கிவிட்டு அதற்குப் பதிலாக எட்டன விலையுள்ள காஷ்மீர் குல்லா ஒன்று வாங்கி வைத்துக் கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழை மக்களோடு பயணம் செய்த போது, இம்மாதிரி எளிய உடுப்புத் தரிப்பது தான் ஏற்றது என்று கருதினர்.