பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

கத்தியவார் காட்டில் அக்காலத்தில் மக்கள் உடையின் மீது அதிக அக்கறை காட்டினர். கோட்டு அணியாமல் எவளுவது தெருவில் கடந்து சென்றாளுல்ை, அவன் சரியாக உடுத்தவில்லை என்று பார்ப்பவர்களெல்லாம் கேலி செய் வார்கள், வெப்பத்தாலும், வியர்வையாலும் உடல் உருளேக்கிழங்குபோல் வெங்தாலும், கோட்டைக் கழற்றக் கூடாது. கோட்டு அணியாமல் ஒரு மாணவன் பள்ளிக்குப் போகமுடியாது. அவனே உள்ளே நுழைய விடமாட்டார் கள். அரைகுறையான உடுப்புடன் பள்ளிக்கு வரக் கூடாது’ என்பது விதி என்று எல்லோரும் சொல்லுவார் கள். கோட்டு அணியாமல் யாரும் வழக்குமன்றத்தில் போய் கிற்கமுடியாது. இம்மாதிரியான காட்டுமிராண்டி களுக்கு இங்கே வேலையில்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆனல் புரட்சிவீரரான காங்தியடிகள், கீழே கான்கு முழ வேட்டியும், மேலே ஒரு சட்டையும் மட்டும் அணிந்து வெளிவரத் தொடங்கினர்.

பார்த்தவர்கள் கேலி செய்தார்கள். காந்தியடிகள், ‘சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். உண்மையில் இந்த வெப்ப காட்டில் இத்தனே ஆடை களேச் சுமங்து திரிவதுதான் அகாகரிகம். மேலும் இந்தியா ஏழை நாடு. ஏழைகளின் காட்டில் தேவைக்கு அதிகமான ஆடைகளை ஒருவன் அணி வது பாவம்’ என்று சொல்லுவார்.


இங்தியாவின் ‘மான்செஸ்டர்’ என்று போற்றப்படும் ஆமதாபாத்தில், நெசவாலேத் தொழிலாளர்கள் ஒருமுறை வேலைகிறுத்தம் செய்தனர். காந்தியடிகள் அவ்வேலே கிறுத் தத்தைத் தலைமை ஏற்று கடத்தி வந்தார். அத்தொழி லாளர்களின் அவலகிலே அடிகளின் உள்ளத்தை வாட்டி யது. பிறர் ஆடையில்லாமல் வருந்தத் தாம் மட்டும் இவ் வளவு ஆடைகளே அணிவது அவருடைய மனச்சாட்சிக்கு