பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 90

ஏற்றதாகத் தெரியவில்லை. காங்தியடிகள் அப்போது பெரிய தலைப்பாகை அணிந்து வங்தார்.

“இவ்வேழைப் பாட்டாளிகள் உடலே மூடிக்கொள்ளப் போதிய துணியில்லாதிருக்கையில், நான் மட்டும் இவ்வளவு ஆடைகளே என் சுமங்து திரியவேண்டும் ? என்னுடைய தலைப்பாகைத் துணியைக் கொண்டு பத்துக் குல்லாய்கள் தைக்கலாமே! அது பத்துப் பேருடைய தலையை மூடப் போதுமே!’ என்று அடிகள் எண்ணினர். அன்றிலிருந்து எளிய கதர்க்குல்லாப் அணியத் தொடங்கினர். காங்தியடி களின் வெண்மையான கதர்க்குல்லாயை எல்லோரும் வேடிக்கையாகப் பார்த்தனர். அவர் தெருவில் சென்ற போது, “அதோ! காங்தி அணிந்து செல்லுகிருரே அது என்ன?’ என்று கேட்பார்கள். சில குறும்புக்காரர்கள் “இது குல்லாயா? அல்லது காசிப் பண்டாக்கள் அணியும் காது மூடியா?” என்று கேலி செய்வார்கள். ஆனல் அக் குல்லாய் வாய்மையின் அறிகுறி என்று அடிகள் விளக்கம் தங்தார். வண்ணக் குல்லாய்களே அணிந்தால், அதில் படி யும் அழுக்குத் தெரியாது. அதேபோலப் பொய்மை படிங்த உள்ளத்தவரும் வாய்மையாளராக வெளியில் தென்படுவர். வெள்ளைக் குல்லாயில் சிறிது அழுக்குப் படிங்தாலும் பளிச் சென்று தெரியும். உடனே அவ்வழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும். அதே போல வாய்மையாளர். தம் உள்ளத்தில் சிறிது பொய்மை யழுக்குப் படிங்தாலும் உடனே போக்கிக் கொள்வர்.


1905-1906-ல் வங்காளத்தில் ஒரு தடவை கதேசி இயக்கம் தீவிரமாகத் தொடங்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம், பிரிட்டிஷ் துணிகளே விலக்குவதுதான். இந்த இயக்கத்துக்கும் அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது, பம் பாய்-ஆமதாபாத் ஆலமுதலாளிகளின் பேராசையாகும்.