பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

ஒரு முழத்துணியே அணிவேன். குளிர் காலத்தில் மட்டும் என் உடலை மூடிக்கொள்ள ஒரு போர்வையைப் பயன் படுத்துவேன்” என்று நண்பர்களிடம் கூறினர். இறக்கும் வரையில் அடிகள் அவ்வுறுதியிலிருந்து தவறவில்லை. கொடுங்குளிர் நாடான இங்கிலாந்து சென்றபோதும், அம் முழத் துண்டுடனேயே .ெ ச ன் ரு ர். இங்கிலாந்தின் பேரமைச்சராயிருந்த சர்ச்சில் கோமகளுர், அடிகளே அரை நிர்வாணப் பக்கிரி (Half Naked Fakir) என்று இகழ்ங் தார். காந்தியடிகள் அவ்விகழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

 *

இந்திய மக்கள் மேலேகாட்டினரைப் போல் ஆடை அணிவது, இந்தியப் பண்பாட்டிற்கும், தட்பவெப்ப நிலைக் கும், தேசிய உணர்வுக்கும் மாருன செயல் என்று அடி, களின் மனச்சாட்சி அறிவுறுத்தியது. சமயம் நேரும் போதெல்லாம் அடிகள் இக்கொள்கையை வற்புறுத்தத் தயங்கியதில்லை. காசியினுள்ள இந்துப் பல்கலைக் கழகத் தைப் பற்றி எல்லாரும் அறிவர். அது சிறந்த பல்கலைக் கழகம் என இந்திய மக்களால் கருதப்படுகிறது. அதைத் தோற்றுவித்து முன்னுக்குக் கொண்டுவந்தவர் பழம்பெரும் தேசபக்தரும், பேரறிவாளருமான பண்டித மதன மோகன மாளவியா என்பவர். அப்பல்கலைக் கழகத்திற்கு நிதி திரட் டும் கோக்கத்தோடு அவர் ஒரு விழாக் கொண்டாடினர். அவ்விழாவுக்குத் திருவாட்டி அன்னிபெசன்ட் அம்மை யாரும், பல சுதேச மன்னர்களும் வந்திருந்தனர். சுதேச மன்னர்கள் அப்போது அணிந்திருந்த ஆடை அலங்காரம் அடிகளின் உள்ளத்தில் அருவருப்பை விளைவித்தது. அவர் கள் மேலைநாட்டு உடையணிந்திருந்ததோடு, இடையில் வைரமிழைத்த பட்டாக் கத்திகளும், கழுத்தில் முத்துக் கோவைகளும், நவமணிகள் பதித்த பொன்னனி மாலே களும் அணிந்திருந்தனர். அடிகள் அப்போது வெறும்