பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

தனத்துக்கோ அடையாளம்’ என்று ஒரு தாளில் எழுதிச் சீதாராமய்யாவுக்குக் கொடுத்தனுப்பினர். அதைப் படித்த சீதாராமய்யா, ‘இம் மேல் துண்டு நாளை இரண்டாகக் கிழிக்கப்பட்டு இரண்டு துண்டுகளாகப் பயன்படப் போகிறது: அவ்விரு துண்டுகளும் பின்னர் தலையணை உறை களாக மாறும் ; அத் தலையணை உறைகளும் கொஞ்சநாள் பயன்பட்ட பிறகு இரண்டு கைக்குட்டைகளாகும் : பிறகு அவ்விரண்டு கைக்குட்டைகளும் குழங்கைகளின் இடை யைப் போர்த்தும் சிறு துணிகளாக மாறும்” என்று கூறிச் சிரித்தார்.

11. தொழில்

காந்தியடிகள் ஒரு முறை ஜொகன்னஸ்பர்க்கிலிருந்து டர்பன் நகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப் போது திருவாளர் போலக் என்பவர் அவரை வண்டியேற்றி விடுவதற்காகப் புகைவண்டி கிலேயத்திற்கு வந்திருந்தார் அப்போது அவர் கையில் ‘கடைசி மனிதன் கல்வாழ்வு வரை (Unto This Last) என்ற நூல் இருந்தது. அது ஆங்கிலப் பேரறிஞரான இரஸ்கின் என்பவரால் எழுதப்பட்டது புகைவண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக அங் நூலைக் காந்தியடிகளிடம் கொடுத்தார் போலக் காங்தி யடிகள் அதைப் படிக்கத் தொடங்கிய பிறகு கிறுத்தவே இல்லை. காங்தியடிகளின் உளப் போக்கை அங் நூல் கொண்டதாக விளங்கியது. மக்கள் வாழ்வின் குறிக் கோள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அது தெளிவு படுத்திக் கூறியது. அங் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த மூன்று கொள்கைகள் முக்கியமானவை. அவை பின்வரு

மாறு : -

1. தனி மனிதனின் நன்மை பொதுமக்களின் நன்மை

யில் அடங்கியுள்ளது.