பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

தொடங்கியது. மற்ற வழக்கறிஞர்கள் இதன் பொருட்டுக் காந்தியடிகளைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனல் கேலிக்கும் கிண்டலுக்கும் அஞ்சும் வழக்கம் காங்தியடிகளுக்கு எப்போதுமே கிடையாது. “என் கழுத்துப் பட்டியை நானே சலவை செய்து, பெட்டி போட்டதில் இப்படி மா உதிர்கிறது. அது உங்களுடைய குதுசகலத்துக்குக் காரணமா யிருப்பதில் எனக்கு இருமடங்கு மகிழ்ச்சி “ என்று சொன்னர் காந்தியடிகள்.

  • எதற்காக நீங்களே சலவை செய்துகொள்ள வேண்டும் ? இந்த ஊரில் சலவைச் சாலை இல்லையா ? “ என்று கண்பர்கள் கேட்டார்கள்.

“இருக்கின்றன! அதனால் என்ன? நம்முடைய சொந்த வேலைகளுக்கு எதற்காகப் பிறரை கம்பியிருக்க வேண்டும் ? கம்முடைய வேலைகளே காமே செய்து கொள்வதுதானே நல்லது ?” என்று காந்தியடிகள் கூறினர்.

கொஞ்ச நாட்களில் காந்தியடிகள் சலவைக் கலையில் கைதேர்ந்தவராகிவிட்டார். பின்னல் ஒரு சமயம் திருவாளர் கோகலே தென்னுப்பிரிக்கா வங்திருந்தார். கோகலேயிடம் அவர் அரசியற் குருவான ரான டே அன்பளிப்பாகக் கொடுத்த மேல் துண்டு ஒன்றிருந்தது. அது சரிகைக் கரை யிட்ட அழகிய துண்டு. சிறப்பான கூட்டங்களின்போதும், நிகழ்ச்சிகளின்போதும் அந்தத் துண்டை அணிந்து கொள் வது கோகலேயின் வழக்கம். தென்னப்பிரிக்காவில் ஜொகன்னஸ்பர்க் இங்தியர்கள் கோகலேவுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு மேற்படி துண்டை அணிந்து செல்ல விரும்பினர். ஆல்ை அத்துண்டு மடிப்புக் கலந்து போயிருந்தது. இது குறித்துக் கோகலே அடைங்த கவலையைத் தெரிந்துகொண்டு, தம்முடைய கைவரிசையைக் காட்டுவதாகச் சொன்னர்,

‘அரசியல் வேலைகளுக்கும், வழக்கறிஞர் தொழி லுக்கும் உம்மை கம்பலாம். ஆனல் சலவைத் தொழிலுக்கு