பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

குப்பைகளைக் கூட்டி வாரி எறிந்தார். அப்பொழுதும் தொண்டர்கள் அருகில் வரவில்லை! அதுதான் தோட்டியின் வேலையாயிற்றே! இம் மாநாட்டு விடுதியைப் பற்றிக் காந்தி யடிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“பிரதிநிதிகளில் சிலர் தங்கள் அறைகளின் வெளிப் புறத்துத் தாழ்வாரத்தை இரவு நேரத்தில் அசுத்தம் செய்யவும் பின்வாங்கவில்லை. காலையில் தொண்டர்களிடம் இத்தகைய அசுத்தமான இடங்களேக் காட்டினேன். அவ் விடங்களேத் துய்மைப்படுத்த எவரும் முன்வரவில்லை. அந்தக் கெளரவத்தை என்னுடன் பங்கிட்டுக்கொள்ள ஒருவரும் தயாராயில்லை எனக் கண்டேன். இப்போது கிலேமை பெரிதும் முன்னேற்றமடைந்திருக்கிறது. ஆனல் இன்றுகூட காங்கிரஸ் விடுதியில் கண்டவிடமெல்லாம் அசுத்தமாக்கும் பிரதிநிதிகள் இல்லாமல் போகவில்லை. அவ்வாறே, அந்த இடங்களைச் சுத்தப்படுத்த எந்தத் தொண்டரும் முன்வருவதில்லை... ,

காங்கிரஸ் மாநாடு இன்னும் சில தினங்கள் கல்கத்தா வில் நீடித்திருக்குமானல், கொள்ளே கோய் பரவுவதற்குப் சாதகமான கிலேமை ஏற்படும் என்பதைக் கண்டேன்.”

காந்தியடிகள் மாகாடு கடப்பதற்கு இரண்டு காள் முன்னதாகவே சென்றுவிட்டார். அங்த இரண்டு காட் களும் காங்கிரஸ் அலுவலகத்தில் தம்மாலியன்ற வேலை களைச் செய்ய விரும்பினர். மாநாட்டுச் செயலாளராக விளங்கிய திருவாளர் கோஷாலிடம் சென்றார்.

“உமக்கு என்ன வேலை கொடுக்கட்டும்? குமஸ்தா வேலைதான் கொடுக்கலாம். செய்கிறீரா?” என்று கேட் டார். க | ங் தி ய டி. க ள் மகிழ்ச்சியுடன் செய்வதாகச் சொன்னர்.

“அதோ ஒரு கட்டுக் கடிதங்கள் கிடக்கின்றன. அவற் றைப் பிரித்துப் பாருங்கள். பெரும்பாலும் பயனற்ற