பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

“ஏன்? நீங்கள் பார்-அட்-லா அல்லவா?” என்று மாவ் லங்கர் கேட்டார்.

“ஆமாம்! நான் ஒரு காலத்தில் பாரிஸ்டராக இருக் தேன். ஆல்ை இப்போது வழக்கறிஞகைவா பணியாற்று கிறேன்? இல்லை. நான் ஒரு நெசவாளி; உழவன்; அதுவும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உழவன்” என்று கூறிச் சிரித்தார்.

.

இப்போதுள்ள சபர்மதி ஆசிரமம் துவக்கத்தில் மிகவும் எளிய முறையில் துவங்கப்பட்டது. அப்போது கட்டிடம் எதுவும் கிடையாது. சில கூடாரங்களே இருந்தன. ஒரு முறை திரு. மாவ்லங்கர் குஜராத் சபா சம்பந்தமாகக் கலந்து பேசுவதற்காகச் சபர்மதி சென்றிருந்தார். அன்று இரவு அங்கேயே தங்க வேண்டியகிலே ஏற்பட்டது. மாவ் லங்கருக்கு ஒரு படுக்கை கொடுக்கப்பட்டது. ஒரு கூடாரத் தில் அதை விரித்து உறங்கினர். காலையில் எழுந்ததும் அப் படுக்கையைச் சுருட்டினர். அதை எங்கு கொண்டு போய் வைப்பதென்று அவருக்குத் தெரியவில்லை. அதைப் பற்றிக் கேட்பதற்காக ஆசிரமத்தின் அலுவலகத்திற்குச் சென் ருர். விசாரித்து விட்டுத் திரும்பினர். ஆனல் எதிரில் ஒருமனிதர், தம்முடைய படுக்கையைத் தூக்கித் தலயின் மேல் வைத்துக் கொண்டு வருவதைக் கண்டார் மாவ்லங்கர். அம் மனிதர் வேறு யாருமல்லர். காங்தியடிகளே! மாவ் லங்கர் வியப்பினல் வாயடைத்துப் போய் கின்றார். ஒடிப் போய் காங்தியடிகளிடம் அப்படுக்கையை வாங்கிக் கொள் ளக்கூட அவருக்கு கினேவு வரவில்லை.


திருவாளர் கோகலே 1913-ஆம் ஆண்டு தென்னப் பிரிக்க இந்தியரின் குறைகளே ஆய்வதற்காக வந்திருந்தார். அப்போது காந்தியடிகள் தம் நண்பர்களோடு போனிக்ஸ் ஆசிரமத்தில் தங்கி யிருங்தார். அங்கு கோகலேயைத் தங்க