பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

விளக்குகிறார். இச் சொற்களிலிருந்து, “தொழில் கடமை யின் அடிப்படையில் அமைய வேண்டுமேயன்றிச் சாதியின் அடிப்படையில் அமைவது கூடாது” என்ற சிறந்த உண் மையை நாம் உணரலாம். பொதுவாக இக்காலத்திலும் தண்ணீர் கிரப்புதல், பாத்திரம் கழுவுதல், வீடுவாசல் தூய்மை செய்தல், துணி துவைத்தல், கழிப்பறையைக் கழுவுதல் ஆகிய வேலைகள் மட்டமானவை என்று கருதப் பட்டு வருகின்றன. இவ்வெண்ணத்தை மக்கள் உள்ளத்தி லிருந்து அகற்றுவதற்காகத்தான் காங்தியடிகள் எல்லாப் பணிகளையும் தாமே செய்தார்.

அரை கிர்வாணப் பக்கிரி"யான காங்தியடிகள் அரி சனங்கள் வாழும் சேரியிலும் இருப்பார்: பேரரசர்கள், சிற்றரசர்கள், சமீன்தார்கள், கோடீசுவரர்கள் ஆகி யோரின் மாளிகையிலும் தங்கியிருப்பார். வங்காளத்தில் காங்தியடிகள் ஒரு சமீன்தாரின் அரண்மனையில் தங்க கேரிட்டது. அவ்வரண்மனே கவின வசதிகளோடு கூடிய அழ கிய கட்டிடம். எங்கு பார்த்தாலும் சலவைக் கற்கள் பதிக் கப்பட்டிருந்தன. கண்கவர் ஒவியங்களும், வனப்பு மிக்கப் பொருள்களும், கலைச்சிறப்பு மிக்க நுண்பொருள்களும் அந்தச் சமீன்தாரின் ஆடம்பரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. சமீன்தார் உரத்த குரலில் ஏவலாளரை அழைப்பதும், அவர்கட்கு ஆணேயிடுவதும், அவர்கள் பணியை மேற்பார்வையிடுவதுமாக இருந்தார். பணியாளர் கள் இங்குமங்கும் காற்றாய்ப் பறந்துகொண்டிருந்தனர்.

மாலேத் தொழுகைக் கூட்டம் துவங்கியது. காந்தியடி களேத் தரிசிக்க ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். தொழுகையின்போது விளக்கை அணைத்துவிடுவது அடி களின் பழக்கம். எனவே விளக்குகளே அணைக்குமாறு காங்தியடிகள் கூறினர்.விளக்குகளின் விசைகள்(Switches) சமீன்தாரின் த லே க் கு மே ல் இருந்தன. சமீன்தார் உரத்த குரலில் பணியாளனை விளக்கை அணப்பதற்கு