பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 II

பேட்டித் தொண்டு செய்வார்கள்” என்று கண்ணிர் விட்டுக் கொண்டே கூறினர்.

அடுத்தாற்போல் காந்தியடிகள் சார்பதியா என்ற ஊரை அடைந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திற்கு ஒரு சிலரே வந்திருந்தனர். ஏழ்மை அவர்களே வாட்டியிருந்தது. ஒளியிழங்த கண்ணுேடும், உற்சாகமற்ற தோற்றத்தோடும் அவர்கள் கின்று கொண் டிருந்தனர். காங்தியடிகள் அங்கும் வீதி கேட்டார். அவ், வேழை மக்கள் பாசி படிங்த காசுகளே வழங்கினர். திருவாளர் காகா காலேல்கர் கூட்டத்தினிடையே சென்று காசு வாங்கினர். ஆமாம்! காசுதான்! அவர்கள் வெள்ளி நாணயங்களைக் கண்ணுல் கண்டதில்லை. கிடைத்த ஒரு சில காசுகளையும் கவனமாகக் கங்தையில் முடிந்து வைத்திருக் தனர்; அல்லது பூமியில் போட்டுப் புதைத்து வைத்திருக் தனர். அதல்ைதான் அவைகள் பாசி படிங்து காணப் பட்டன.

“இவ்வேழைகளிட மிருந்துகூடக் காசு வாங்க வேண்டுமா?” என்று காங்தியடிகளிடம் கேட்டார் காகா.

“ஆம்! கட்டாயம் வாங்க வேண்டும்! இவர்கள் வழங் கும் அன்புக் காணிக்கையான பாசி படிந்த செப்புக்காசுகள் புனிதமானவை அவர்களுடைய பரிதாபகரமான வாழ்க் கைக்குப் புது நம்பிக்கை கல்கும் விடி வெள்ளி! இக்காசு அவர்களின் முன்னேற்ற வாழ்க்கைக்கு அறிகுறி’ என்று கூறிஞர் அடிகள்.

 *

1947-ஆம் ஆண்டு நம் நாடு விடுதலே பெற்றது. அம் மகிழ்ச்சியான நேரத்தில் காட்டின் சில பகுதிகளில் கொங் தளிப்பும், குழப்பமும், குருதி வெறியும் தலேவிரித்துப் பேயாட்டமாடின. நவகாளியிலும், காஷ்மீரிலும், தில்லி யிலும் இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருவரையொருவர்