பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 2

வெட்டிச் சாய்த்துக் கொண்டனர். நவகாளியில் குருதி வெள்ளம் பெருக்கெடுத் தோடியது. அக் குழப்பத்தை அடக்குவதற்காகக் காக்தியடிகள் அல்லும் பகலும் சுற்றித் திரிந்தார். காள்தோறும் ஒவ்வொரு சிற்றுாராகச் சென்றார்.

அடிகள் சாந்திப்பூர் என்ற இடத்தை அடைந்ததும் தம் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி எறிந்து விட்டார். அருகிலிருந்த நண்பர்கள் ‘ஏன்?” என்று வின வினர்.

“புனிதமான இடங்களான கோவில்கள், மாதா கோவில்கள், மகுதிகள் ஆகியவற்றில் நுழையும் போது. காலில் செருப்பணிந்தா செல்லுகிருேம்? நான் இப்போது தரித்திர நாராயணனேத் தரிசிக்கச் செல்லுகிறேன். எங்கு மக்களெல்லாம் தம் அன்பிற்குரிய தாயையும். தங்தையை யும், மனைவியையும், குழந்தைகளேயும் இழந்து துன்பக் கடலில் வீழ்ந்து கிடக்கின்றனரோ, அங்கு செல்லுகிறேன்! எங்கு குழந்தைகள் இரக்கமற்றுக் கொன்று குவிக்கப்படு கின்றனவோ அங்கு செல்கிறேன்! எங்கு பெண்டிர் தம் கற்பைப் பறிகொடுத்துத் தம் அம்மணத்தையும் மறைத்துக் கொள்ள ஆடையின்றிக் கலங்கி கிற்கின்றனரோ அங்கு செல்கிறேன்! எங்கு கொள்ளேயும் கொலையும் கோர கடம் புரிகின்றனவோ அங்கு செல்கிறேன்! அத்தகைய இடத் திற்குச் செல்லுவது எனக்கு ஒரு புனித யாத்திரை! அப்படியிருக்க கான் எவ்வாறு செருப்பணிந்து செல்வேன்?” என்று காத் தழுகழுக்கக் கூறினர். ஏழ்மை தாண்டவ மாடும் நவகாளியில் வெறுங் காலோடுங் திரிந்தார். பூவினும் மென்மையான அவருடைய பாதங்களில் முள் தைத்துக் குருதி கொட்டிற்று. அக்குருதி ஏழை மக்களின் பொருட்டு அவர் வடித்த இரத்தக் கண்ணிர்!

,