பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 3

காங்தியடிகள் இந்து முஸ்லீம் கலகத்தின்போது கல்கத்தாவில் தங்கியிருந்தார். அப்போது பாட்டாளிகளின் கூட்டத்தில் பேச வேண்டி ஏற்பட்டது. அப்போது பாட்டாளிகளின் நிலையை விளக்கிப் பின் கண்டவாறு கூறினர்.

‘பாட்டாளிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஆண்டவனைத் தொழுவதும் கமாஸ் செய்வதும் அவரவர்களுடைய சொங்த விருப்பம். சமயத் தின் அடிப்படையில் சம்பள உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது. அவரவர்களுடைய திறமையின் அடிப்படை யிலேயே சம்பளத்தின் உயர்வு தாழ்வு இருக்க வேண்டும். பாட்டாளிகளே வேலைக்கமர்த்திக் கொள்ளும் தொழில் அதி பரும், ஒரு பாட்டாளியே! அதோடு பாட்டாளிகளின் பாது காவலரும் அவரே! இது என் கொள்கை.

பாட்டாளிகள் ஏழ்மையில்ை வாடவேண்டிய அவசிய மில்லை. தொழில் அதிபருக்கு அவரிடமுள்ள பணம், செல்வ மாகும். அதே போலப் பாட்டாளிக்கு அவனுடைய கையும் காலும் செல்வமாகும். பணம் எப்போதும் ஒரிடத்தில் கிலேத்து கில்லாமல் ஒடிவிடும். ஆனல் பாட்டாளி இழந்த தன் உடல் வலிமையை மீண்டும் பெற்று வருவாயைத் தேடிக் கொள்ளலாம்; அப்படியிருக்கப் பாட்டாளி இன்னும் தன்னை ஏழை என்று கருதுகிருன். பெரிய கப்பல் கள் பெருமிதத்தோடு கிழித்துச் செல்லும் ஆழ் கடலின் பரங்த நீர் எவ்வாறு சிறு துளிகளால் ஆக்கப்பட்டதோ, அதே போன்று காட்டிலுள்ள கோடிக் கணக்கான செல்வங் களும் பாட்டாளிகளின் உழைப்பால் உண்டானவையே! ஒரு காரோட்டி எவ்வாறு பாட்டாளியோ, அதேபோல உயர்ந்த வருவாயுடைய ஒரு பொறியியல் வல்லுகனும் (Engineer) பாட்டாளியே! எல்லாப் பாட்டாளிகளும் ஒன்று திரண்டு, தங்கள் வாழ்க்கைத் தேவைக்குப் போது மான தொகையை கிர்ணயிக்கவேண்டும். பிறகு எல்லோரும்