பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 5

பிறகு சிறையிலிருந்த காலத்தில் அம்மொழியறிவைப் பெருக்கிக் கொண்டார். காங்தியடிகள் இங்கிலாந்து காட் டில் வழக்கறிஞர் கல்வி பயின்ற காலத்தில், ஐரோப்பிய காட்டின் பழம்பெரும் மொழியான இலத்தீனேயும், அங்கு பொது மொழியாக மதிக்கப்படும் ஃபிரெஞ்செயும் கற்றார், தம் தாய்மொழியான குஜராத்தின் முன்னேற்றத்திற்கு அடிகள் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார். குஜராத் பத்திரிகைகளுக்கும், அம்மொழி வளர்ச்சிக்கும் நன்கொடை வழங்கியிருக்கிறார். அவருடைய ஆங்கிலப் பேச்சும் எழுத் தும் மிக எளிய கடையில் அமைந்திருக்கும்; ஆடம்பரமிருக் காது; எதுகை மோனேகளில் இடர்ப்படமாட்டார்; மிக அரிய கருத்துக்களையும் எளிய சொற்களைக் கொண்டு விளங்கவைக்கும் இவருடைய ஆற்றலே ஆங்கில மக்களே பாராட்டிப் பேசுகின்றனர்.

தமிழ்மொழிக்கும் காங்தியடிகளுக்கும் கெருங்கிய தொடர்புண்டு.காங்தியடிகள்தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த போது, தமிழர்களோடு நெருங்கி பழகினர். கேடால்,திரான் ஸ்வால் முதலிய மாநிலங்களில் மிகுதியாக வாழ்ந்தவர்கள் தமிழர்களே காந்தியடிகள் தம்முடைய சத்தியசோதனை யில் குறிப்பிடும், ஜாக் முதலியார், தம்பி நாயுடு, பாலசுந்த ரம், பி. கே. நாயுடு, திருமதி தம்பி காயுடு, திருமதி என். பிள்ளே, திருமதி கே. முருகேசபிள்ளை. திருமதி பெருமாள் நாயுடு, திருமதி பி. கே. நாயுடு, திருமதி கே. சின்னச்சாமி பிள்ளே, திருமதி ஆர். ஏ. பூதலிங்கம், குமாரி மீட்ைசிப் பிள்ளை, குமாரி முருகேசபிள்ளை ஆகியோர் தமிழர்களே. பாலசுங்தரம் ஒரு தோட்டக்கூலி. மற்றவர்கள் எல்லோரும் தென்னப்பிரிக்கப் போராட்டத்தில் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்துத் தொண்டாற்றியவர்கள்; ஆற்றாெளு இன்னல்களுக்கு ஆட்பட்டவர்கள்: சிறையில் வாடியவர் கள்; காடு கடத்தப்பட்டவர்கள்; மனைவி மக்களையும் செல் வத்தையும் இழங்தவர்கள். ‘கறுப்புச் சட்ட எதிர்ப்புப்