பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.23

சத்தியத்திற்கு மாறுபட்ட செயலாகவே கருதினர். ஆகையில்ை பிறர் செய்யத் துணியாத செயல்களைக் காங்தி யடிகள் செய்யவேண்டி நேரிட்டது.

பண்டைக் காலத்தில் பள்ளிப் படிப்பு என்றால், ஆங்கிலப் படிப்பையே குறிக்கும். ஒவ்வொரு தங்தையும் தன்னுடைய மக்கள் ஆங்கிலம் கற்றுப் பட்டதாரியாக வேண்டும்; அரசாங்கத்தில் நல்ல அலுவலில் அமர்ந்து கக மாக வாழ வேண்டும் என்று எண்ணினர். “அரைக்காசு என்றாலும் அரண்மனைக்காக உயர்ந்தது என்ற பழமொழி காட்டில் ப்ரவலாக வழங்கிவந்த ஒன்று. எனவே அரசாங்க வேலேயே மக்களின் குறிக்கோளாக இருந்தது. அக் குறிக் கோளே எட்டிப்பறிக்கும் ஏணியாக ஆங்கிலக் கல்வி கருதப் பட்டது.

ஆனல் காங்தியடிகள் இக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவர். ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பித் தம் மக்களே அவர் படிப்பிக்க விரும்பவில்லை. அப்படிச் செய்ய அவர் மனச்சாட்சி இடங்தரவில்லை. அவர் ‘பாரிஸ்டர்’ என்ற காரணத்தால் தென்னப்பிரிக்க வெள்ளையர் பள்ளியில், இவருடைய மக்களுக்கு இடம் கிடைத்திருக்கும். ஆனல் இவர் அனுப்ப விரும்பவில்லை. இந்தியாவிற்கும் அனுப்பிப் படிக்க வைக்க விரும்பவில்லை.

காங்தியடிகளின் மக்களில் மூத்தவராகிய அரிலால் காங்திக்குத் தங்தையின்மீது அடங்காத கோபம். மற்ற பெற்றாேர்கள் தம் பிள்ளைகளை உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கவைப்பதைப்போல் தம்மையும் படிக்க வைக்கவில்லையே என்று அவர் குறைப்பட்டுக் கொண்டிருங் தார். தங்தையாரிடம் வெளிப்படையாகவே இதை எடுத்துக் கூறிக் குற்றம் சாட்டினர். செய்தித்தாள்களிலும் எழுதி ஞர். இறுதியில் தங்தையைவிட்டு அடியோடு பிரிந்து கம் வாழ்க்கையைச் சுதந்தரமாக அமைத்துக்கொண்டார்.