பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அதற்காக இளம் பெண்களே எனக்கு அறிமுகம் செய்து வைத்து வருகிறீர்கள். ஆனல் காரியம் மிஞ்சிப்போவதற் குள், தங்கள் அன்புக்கு நான் அருகதையற்றவன் என் பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கிய போதே நான் திருமண மானவன் என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கி லாங்தில் இங்திய மாணவர்கள் திருமண மாகாதவர்போல் கடிப்பதை அறிந்து கானும் அவ்வாறு செய்து வங்தேன். என் தவற்றினே இப்போது உணருகிறேன். சிறுவனுக இருந்தபோதே எனக்கு மணமாகிவிட்டது. எனக்கு ஒரு மகனும் இருக்கிருன். இதுநாள் வரை இச்செய்திகளைத் தங்களுக்கு அறிவியாதிருந்ததன் பொருட்டு என் உள்ளம் வருங்துகிறது. இப்பொழுதேனும் உண்மையைச் சொல்லு வதற்கு இறைவன் எனக்கு மன உறுதி அளித்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். என்னைத் தாங்கள் மன்னிப்பீர் களா? எனக்குத் தாங்கள் அறிமுகம் செய்துவைத்த இளம் பெண்ணிடம் தகுதியற்ற உரிமை எதையும் கான் எடுத்துக் கொண்டதில்லை யென்று உறுதி கூறுகிறேன். என்னுடைய எல்லே என்ன என்பதை உணர்க்தே கடந்துகொண்டேன். கான் ஏற்கெனவே திருமணமானவன் என்பது தங்களுக்குத் தெரியாதாதலின், எங்களிருவருக்கும் மணம் செய்துவைக்க வேண்டுமென்று தாங்கள் விரும்பியது இயல்பே. கிலேமை எல்லே மீறிப்போகக்கூடா தென்பதற்காக உண்மையைக் கூறலானேன். இக்கடிதத்தைப் படித்தும் தங்கள் அன் புக்குத் தகுதியற்றவகை நான் கடந்துகொண்டதாய்த் தாங்கள் கருதினால், அதற்காகத் தங்கள் மீது வருத்தப்பட மாட்டேன். தாங்கள் இதுகாறும் என்னிடம் காட்டிவங்த பேரன்பிற்கும் செய்த உதவிக்கும் என்றென்றைக்கும் கடமைப்பட்டவணுவேன். இதற்குப் பிறகும் தாங்கள் என்னேப் புறக்கணிக்காமல், தங்கள் வீட்டுக்கு வரத்தகுதி யுள்ளவகைக் கருதினுல் கான் மகிழ்ச்சியடைவேன் என்று