பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இசைவதாகத் தெரியவில்லை. உடனே காங்தியடிகள் அவ் வண்டியின் மறுபக்கக் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றார் கூட்டத்தார் இதைக் கவனிக்கவில்லை. அப் போது அருகில் வந்த மற்றாெரு உங்து வண்டியில் அடிகள் ஏறிக்கொண்டார். வண்டி பல்கலைக் கழகத்தை நோக்கிப் பறந்தது; என்றாலும் ஒரு கிமிடம் காலதாமதம் ஏற்பட் டது. காங்தியடிகள் எடுத்தவுடன் தம் கால தாமதத்திற் காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சொற்பொழிவைத் துவக்கினர்.

16. சிக்கனம்

காங்தியடிகள் காஷ்மீரில் தம்முடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்து-முஸ்லீம் கலகம் மிகுதியாக இருந்த நவகாளிக்குச் சென்று கொண்டிருங் தார். அப்போது அப்பாபெகனும், மனுபென்காந்தியும் காந்தியடிகளோடு சென்றுகொண்டிருந்தனர். காந்தியடி களின் தேவைப் பொருள்களெல்லாம். சரியாக இருக்கின் றனவா என்று பார்த்தார்கள் அப்பெண்கள். அவருடைய கழிவுப் பாத்திரத்தை (Chamber - Pot) மறந்து வந்து விட்டதை அவர்கள் உணர்ந்தார்கள். மனுகாக்தி காங்தி யடிகளை நோக்கி, “பாபு புதிதாக ஒரு கழிவுப் பாத்திரம் வாங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

காந்தியடிகள் சிரித்துக்கொண்டே, “அதற்கென்ன வாங்கிக்கொள்ளலாம். உன்னுடைய த க் ைத உன் பணத்தை எண் பாதுகாவலில் போட்டு வைத்திருக்கிறார், விரும்பினல் அப் பணத்தில் புதிதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம். ஆனல் என் கைப்பணத்திலிருந்து ஒரு காக தரமாட்டேன்’ என்று சொன்னர். காக்தியடிகள் இதை விளையாட்டுக்காகச் சொன்னர் என்பது மனுவுக்

ம. 1.5