பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

எவ்வளவு பெரிய கருமி என்று உனக்குத் தெரியாதா? சிறிது தாமதமாகத் தண்ணிரைச் சுடவைப்பதால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? இந்தத் துணியை கணேப்பதற்கு எவ்வளவு மண்ணெண்ணெய் பாழாகியிருக்கும் ! கான் இதைக் கவனிக்காமலிருந்தால், இத்துணியைத் தீயிலிட்டுப் பொசுக்கியிருப்பாய்! நல்ல பெண் !ே” என்று கடிந்து கொண்டார் காங்தியடிகள்.

மனு காங்தியடிகளை நோக்கி, ‘பாபு நாம் என் அவ் வளவு கருமித்தனமாக இருக்கவேண்டும்?’ என்று கேட் டாள்.

“நீ தாராள உள்ளமுடைய ஒரு தங்தைக்கு மகள், ஆனல் அவ்வாறு சம்பாதித்துக் கொடுக்க எனக்கு எங்தத் தங்தையுமில்லை. மனு! நான் விளையாட்டுக்காக எதேனும் சொன்னல்கூட, அதில் ஆழ்ந்த உண்மையிருக்கும். அதை அறிந்துகொண்டால்தான் என் உள்ளம் திருப்தியடை யும்’ என்று கூறினர் காங்தியடிகள். மனு அவ்வாறே அத் துணியைத் தூய்மைப்படுத்திக் காயவைத்தாள். அருகில் கிடந்த வைக்கோலே எடுத்து, அதன் உதவியால் அடுப்புப் பற்றவைத்தாள். அளவற்ற அரசியல் பணிகளினிடை யிலும்கூட, இதுபோன்ற சிறு விஷயங்களில் அறிவுரை கூறக் காந்தியடிகள் தவறமாட்டார்.

 $:

காந்தியடிகள் எப்போதும் இரவு 11 மணிக்குத்தான் உறங்கச் செல்வது வழக்கம். அதல்ை அவருக்குப் பணி விடை செய்யும் மனுபென்காந்தியும் அங்நேரம் வரையில் விழித்துக் கொண்டிருக்க நேரிடும். பிறகு பின்னிரவில் 2 மணிக்கே எழுந்துவிடுவார். அதோடு மனுவையும் எழுப்பிவிடுவார். மிகுந்த குளிர்காட்களில் அவளால் எழுந்திருப்பது சற்றுத் தொல்லையாயிருக்கும். ஆனல் கடமை வீரனை காந்தியடிகளுக்குக் குளிரும் ஒன்றுதான்: வெயிலும் ஒன்றுதான்.