பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

ஒருநாள் மனு, காந்தியடிகளை கோக்கி, ‘பாபு நீங்கள் தாமதித்து எழுங்தாலோ அல்லது கடிகாரத்தில் மணியைப் பார்ப்பதில் தவறு செய்தாவோ நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்தித் தீபம் கொண்டு வணங்குவேன்!” என்று சிரித்துக்கொண்டே கூறினுள்.

காங்தியடிகள் மனுவின் சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்தார். “மனு ஆண்டவன், நீ லஞ்சம் கொடுத்து ஏமாற்றும் அளவுக்கு ஏமாளியல்ல!” என்று கூறிவிட்டு உறங்கினர்.

பாவம் ஆண்டவன் மனுவின் வேண்டுகோளுக்கு இரக்கம் காட்டியதாகத் தெரியவில்லை. சரியாக மணி இரண்டுக்குக் காங்தியடிகள் விழித்துக் கொண்டார். அன் போடு மனுவின் தலையில் தட்டி,'மனுதி எழுந்திருந்து பார்! நீ கொடுப்பதாகச் சொன்ன லஞ்சத்தில் ஆண்டவன் ஏமாற வில்லை” என்று சொன்னர். பிறகு அவளே விளக்கேற்று மாறு சொன்னர். அப்பொழுது மனு, ‘பாபு நாம் நாள் தோறும் உறங்கச் செல்லுவதற்கு மணி பத்து அல்லது பதினென்று ஆகிவிடுகிறது. பிறகு இரண்டு மணிக்கே எழுந்து விடுகிருேம். அப்படியிருக்க, நாம் என் விளக்கை அணேக்க வேண்டும். அணைக்காமல் மங்கலாக எரிய விட்டால் என்ன?’ என்று கேட்டாள்.

‘நீ சொல்வது ஒருவகையில் உண்மைதான். ஆனல் அவ்வளவு நேரம் எரிவதற்கு மண்ணெண்ணெய் யார் கொடுப்பார்கள்? நீயும் சம்பாதிப்பதில்லை; நானும் சம்பா திப்பதில்லை. நீ அவ்வாறு கினைப்பதற்குக் காரணம், உன்னுடைய தங்தை மகுவாவில் சம்பாதித்துக் கொண்டிருக் கிரு.ர். விளக்கை அணைப்பதால் மண்ணெண்ணெய் மிச்ச மாவதோடு வேறு ஒரு நன்மையும் உள்ளது. விழித்தவுடன் மீண்டும் விளக்கை ஏற்றுவதால், கம் உறக்கம் பறந்து விடு கிறது. நான் எதாவது சொல்லி, நீ அதை எழுதும்போது