பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பட்டன. தங்கச் சாமான்கள், வெள்ளிச் சாமான்களோடு விலையுயர்ந்த வைர நகைகளும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தப் பரிசுகளில், ஐம்பத்திரண்டு பவுன் பெறுமான முள்ள கண்டகாரம் ஒன்றும் இருந்தது. இது காங்கி யடிகளின் மனைவியான கஸ்தூரிபாய்க்கென்று கொடுக்கப் பட்டது.

மேற்படி வெகுமதிகள் ஏராளமாகக் கிடைத்த ஒரு காள் காந்தியடிகளுக்குத் தூக்கமே பிடிக்க வில்லை. பரிசு களேத் தாம் சொங்தத்துக்கு வைத்துக்கொள்வது ஏற்றதா என்று சிந்தித்தார். அவை பெரும்பாலும் சமூகத்துக்கு அவர் செய்த தொண்டின் பொருட்டு அளிக்கப்பட்டவை. அவற்றை ஏற்றுக் கொண்டால் சமூகத் தொண்டுக்குக் கூலி பெற்றுக் கொண்டதாகும். அது முறையாகுமா ஆயிரக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகளை வேண்டாமென்று புறக்கணிப்பதும் எளிதான செயலில்லை. வேண்டாமென்று மறுப்பது காங்தியடிகளுக்கு விருப்பமா யிருந்தாலும், அதற்கு மனைவியும் குழங்தைகளும் ஒப்புக் கொள்ள வேண்டுமே? அவர்கள் ஒருவேளை எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வது?

காங்தியடிகளின் வீட்டில் அது வரை விலயுயர்ந்த நகை எதுவும் கிடையாது. தங்க, வெள்ளிச் சாமான்கள் கிடையவே கிடையா. நகைப் பித்தை ஒழிக்க வேண்டும் என்று காங்தியடிகள் மக்களுக்கு அடிக்கடி எடுத்துக் கூறி வங்தார். தம் குடும்பத்தில் அக் கொள்கையை உறுதியுடன் கடைப்பிடித்து வந்தார். அப்படி யிருக்க, இப்போது பரிசாகக் கிடைத்த தங்கக் கடிகாரங்கள், தங்கச் சங்கிலி கள், வைர மோதிரங்கள் ஆகியவற்றை என்ன செய்வது?

இரவெல்லாம் ஆழ்ந்து சிங்தித்துப் பரிசுகளேச் சொங்

தத்துக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வங்தார். அவற்றைத் தென்னப்பிரிக்க இந்தியர் கலனுக்கே