பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

“குழங்தைகளுக்கு நாளேக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிருேமா? அவர்களுக்கு வயது வந்த பின் திருமணம் செய்து கொள்ளலாம். அப்போது அவர்களே தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொள்வார்கள். நாமாகத் திருமணம் செய்து வைத்தால், ககைப் பைத்தியம் பிடித்த பெண்களைத் திருமணம் செய்து வைக்கப் போவதில்லை. அப்படி உன் மருமக்களுக்கு நகை செய்து போடுவது இன்றி யமையாதது என்றால் நான் ஒருவன் இல்லையா? என்னைக் கேட்டால் வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறேன்!”

“உங்களையா கேட்பது இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா? என் னுடைய நகைகளை யெல்லாம் நீங்கள்தானே பிடுங்கிக் கொண்டீர்கள். அப்படிப்பட்ட நீங்களா காட்டுப் பெண் களுக்கு நகை செய்து போடப் போகிறீர்கள்? ஒருநாளும் இல்லை! இப்போதே என் குழந்தைகளேத் துறவிகளாக்கப் பார்க்கிறீரே! கூடாது! மேலும் என்னுடைய கண்டகாரத் தைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை?

இதைக் கேட்ட காங்தியடிகள் சற்றுச் சினங்கொண்டு. *கண்டகாரம், இந்திய சமூகத்துக்கு நான் செய்த ஊழியத் துக்காகக் கொடுக்கப்பட்டதா? உன்னுடைய ஊழியத்துக் காகக் கொடுக்கப்பட்டதா?’ என்று கேட்டார்.

“உங்களுடைய ஊழியத்துக்காகத்தான். அவ்வூழி யத்தில் எனக்குப் பங்கில்லையா? உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லையா? இரவும் பகலும் உங்களுக்காக உழைத் தேனே! அதெல்லாம் ஊழியமில்லையா? வழியோடு போகிற வர்களே யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து என்ன வதைத்தீர்களே! அதெல்லாம் என்ன? உங்களுடைய விருந்தாளிகளுக்கெல்லாம் நான் அடிமையைப் போல் உழைக்கவில்லையா? அவைகட்காக இந்தக் கண்டகாரம் எனக்குத் தகாதா?”