பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

டன. அவைகளைக் கையில் வாங்கும்போது காந்தியடிகள்

முகம் அடைந்த மாறுதலே விவரித்துக் கூற முடியாது.

ஏதோ தீண்டத்தகாத ஒரு பொருளேத் தீண்டியவர்போல்

அப் பொருளே வாங்கி மேசையின்மேல் வைத்துவிட்டார்.”

சபர்மதியில் முதன்முதலில் ஆசிரமம் துவக்கப்பட்ட போது போதிய கட்டிட வசதி அதில் கிடையாது. துணியா லான கூடாரங்களே இருந்தன. அப்போது கிரிஜா சங்கர் என்ற சோதிடர் ஒருவர் அடிக்கடி காங்தியடிகளைக் காண வருவார். அவர் ஆசிரம மாணவர்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்துவங்தார். அ வ ர் சோதிடத்தில் வல்லுநர். ஆமதாபாத்திலிருந்த பெரிய முதலாளிகளெல் லாம் அவர்பால் பெருகம்பிக்கை கொண்டிருந்தனர். அம் முதலாளிகளில் சோமலால்ஜி என்பவர் ஒருவர். அவர் காங்தி ஆசிரமத்தில் தேசியப் பாடசாலை கட்டுவதற்காக, காற்பதாயிரம் ரூபாய் கிரிஜாசங்கர் மூலமாகக் கொடுத்து விடுவதாகச் சொல்லி அனுப்பினர். காங்தியடிகளும் அதற்கு ஒப்புக்கொண்டார். சோமலால்ஜி பணமும் கொடுத்தனுப்பினர். அச்சமயத்தில் இன்புளுயன்சா என்ற கொள்ளே நோய் ஆமதாபாத்தில் பரவியிருந்தது. நாள் தோறும் நூற்றுக்கணக்கானவர் இறந்து கொண்டிருக் தனர். ஆகையால் அவ்வாண்டு ஆசிரமத்தில் பள்ளிக் கட்டிடம் கட்ட இயலாத கிலே ஏற்பட்டது. எனவே காந்தியடிகள் அந்தப் பணத்தைச் சோதிடரிடம் கொடுத்து. “நாங்கள் இங்த ஆண்டு பள்ளிக்கூடம் கட்ட முடியவில்லை. ஆகையால் இப்பணத்தைச் சோமலால்ஜியிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறினர்.

அதற்குச் சோதிடர், “இப்பொழுது கட்டாவிட்டான் நீங்கள் மறுபடி கட்டத்தானே போகிறீர்கள். பின் ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் ? கட்டும்போது பயன்படுத் திக்கொள்ளலாமே!” என்று சோதிடர் சொன்னர்.