பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

‘உண்மை! ஆல்ை பிறருடைய பணத்தை அதுகாள் வரையில் வைத்துக் காக்க என்னல் ஆகாது. பள்ளி கட்டத் தொடங்கும்போது சோமலால்ஜியிடம் வாங்கிக் கொள்கிறேன். அவர் தராவிட்டால் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்கிறேன்” என்று காங்தியடிகள் கூறினர்.

சோதிடர் வேறு வழியின்றி அப் பணத்தைச் சோம லால்ஜியிடம் கொண்டு சென்றார். சோமலாலோ, “ஒரு தடவை கன்கொடையாகக் கொடுத்த பணத்தை மீண்டும் கான் திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று கூறி ஏற்க மறுத்துவிட்டார்.

  காங்தியடிகள் பொதுப்பணத்தைக் காப்பதில் எவ் வளவு கண்ணுங் கருத்துமாக இருந்தாரோ அதுபோல் பொதுப் பணத்தைச் சேர்ப்பதில் மிகவும் கருத்தாக இருந் தார். பொது நிதிகள் சேர்ப்பதில் காங்தியடிகளுக்கு இணை யான ஆற்றல் வாய்ந்தவர்கள் யாருமே கிடையாது. அப் போதெல்லாம் காங்தியடிகளேத் தரிசிக்கப் பல பெண் மணிகள் பக்தியுடன் வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண் மணிகள் நிறைய ககைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா ? தம்மைக் காணவரும் பெண்களைப் பார்த்து, “இந்த நகைகளே எதற்காக இப்படிச் சுமக் கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்துவிடுங்கள்; கல்ல காரியத்துக்குப் பயன்படுத்துகிறேன்” என்று கூசாமல் கேட்டுவிடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு, பெண் மணிகள் காங்தியடிகளின் அருகில் சென்று, அவரிடம் பேச வேண்டுமென்று ஆசைப்படுவது குறைந்துபோயிற்று

காங்தியடிகள். தமிழ்காட்டுச் சுற்றுப்பயணத்தின் போது சேலம் வங்திருந்தார். அப்போது ஒரு சிறு சம்பவம் கிகழ்ந்தது. டாக்டர் வரதராஜூலு நாயுடு சேலத்தில் வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

ம. 16